
Arulmigu Gharivaradharaja Perumal Thirukoyil
அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில், நெற்குன்றம், சென்னை - 600107
🔱 Pandurangar
நெற்குன்றம்
Chennai District, Tamil Nadu, India — 600107
📋 Temple Details
⏰ Opens+91 99628 11792
📞 Phone+91 99628 11792
🎉 Festivalராமநவமி, வைகுண்ட ஏகாதசி, பவுர்ணமி
🙏 Prayer Intentionகுழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள சந்தான கோபாலரை வேண்டிச் செல்கின்றனர்.
🕯️ Vow Ritualஇங்குள்ள பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்து
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் கரி வரதர் சுமார் ஐந்தடி உயரம். நான்கு திருக்கரங்கள். அபய ஹஸ்தங்கள்
📜 About this temple
கரி என்றால் யானை என்று பொருள் வருமே ! ஏன் இந்தப் பெருமாள், தன் பெயருடன் ஆனைமுகத்தான் பெயரையும் இணைத்துக்கொண்டுள்ளார்? கஜேந்திர மோட்சக் கதை நினைவுள்ளதா? கடிகொள் பூம்பொழிலாய் காமமுறு பொய்கையாய் தாமரை மலர்களுடன் அந்தத் தடாகம் விளங்க, அதை வேழம் (யானை) பார்த்து நித்யம் ஒரு மலரை பக்தியுடன் மாலோனுக்குச் சமர்ப்பிக்க, அந்தக் கரியின் விதிப்படி ஒரு நாள் முதலை ஒன்று அதன் காலைப் பிடிக்க, நெடிய போராட்டத்துக்குப் பின் தோல்வியடைந்த யானை ஆதிமூலமே என அழைக்க, சரணாகதி என்று வந்த முந்தைய பக்தர்கள் பிரகலாதன் மற்றும் பாஞ்சாலியை விரைந்து வந்து காத்ததைப் போல, இந்தக் கரியையும் காப்பாற்றி, முதலை முகத்தில் கரி பூசி, இருவருக்குமே மோட்சம் தருகிறார் பரந்தாமன். இந்தச் சம்பவம் மதுரவாயிலில் நிகழ்ந்ததென்று ஒரு கருத்தும், நெற்குன்றத்தில் நடந்ததாக இன்னொரு கருத்தும் நிலவுகிறது. ஸ்ரீமத் பாகவதமோ, பாற்கடலின் உள்ளே திரிகூட பர்வதம் என்ற மலையின் அடிவாரத்தில் இருந்த ஒரு தடாகத்தில், இந்த கஜேந்திர மோட்சம் நடந்ததாக விவரிக்கின்றது. கபிஸ்தலம் போன்ற தலங்களும் உதாரணமாகச் சொல்லப்படுகின்றன. கரி மோட்சம் எங்குதான் நடந்தது? ஒரு காலத்தில் லெமூரியா கண்டம் என்றழைக்கப்பட்ட பாரத நாடு, இன்று சுருங்கி சிறிய தீபகற்பம் போல் இருப்பதும் (சரித்திர ஆராய்ச்சியாளர் கூற்று), அறுபதுகளில் நாம் கண்ட தனுஷ்கோடி பிறகு காணாமல் போனதும் உண்மைதானே ! எனவே, இந்த ஆராய்ச்சியைத் தவிர்த்துவிடுவோம். கண் இமைகள் மூடிய நிலையில் பக்தர்தம் பரிபாலனத்துக்காக (லோகசேமம் வஹாம்யஹம்) எப்போதும் யோசனையில் இருப்பதுபோல ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் காட்சி தருகிறார்.
அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் கரி வரதர் சுமார் ஐந்தடி உயரம். நான்கு திருக்கரங்கள். அபய ஹஸ்தங்கள் உண்டு. தொப்புளுக்குக் கீழே சிம்ம முகம். இடது மார்பில் ஸ்ரீதேவி வசிப்பதற்கான வடு இருப்பது சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
🔱 Temple Lore & Pilgrimage
✨ Sthala Greatness
இந்தக் கரி வரதர் சுமார் 400 ஆண்டுகளுக்குமுன் வடிவமைக்கப் பெற்றவர். காஞ்சி வரதரை ஒத்தவர். மூலவர் கரி வரதர் சுமார் ஐந்தடி உயரம். நான்கு திருக்கரங்கள். அபய ஹஸ்தங்கள் உண்டு. தொப்புளுக்குக் கீழே சிம்ம முகம். இடது மார்பில் ஸ்ரீதேவி வசிப்பதற்கான வடு. இவருக்கு விசேஷமான தைலக்காப்பு மற்றும் திருமஞ்சனமும் உண்டு. வைகானஸ முறைப்படி மற்ற விசேஷங்களும் உண்டு. மூலவருக்கும் உத்ஸவருக்கும் ஒரு வேறுபாடு உண்டு. உத்ஸவர் தன் கையில் கதை வைத்திருக்கிறார். இவர் சத்யநாராயணரின் அம்சம்! அதனால், பவுர்ணமி நாட்களில் இந்தக் கரி வரதருக்கு விசேஷ பூஜை உண்டாம் ! தாயாருக்கு தனிச் சன்னதி கிடையாது. வரத ஆஞ்சநேயர் என்ற அனுமன் சன்னதியும் உண்டு. இவரும் மகா வரப்பிரசாதி ! சனிபகவானின் பார்வை பக்தர்கள் மேல் நேரடியாகப் படக்கூடாது என்பதற்காக அவர் கால் ஒன்று ஊனமானதாகவும், அதனால் சற்றே தலை சாய்த்து சனிபகவான் இருப்பதாகவும், இந்த தத்துவத்தை உணர்த்த அனுமனும் இங்கு சற்றே தலைசாய்த்து முழங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இருக்கிறார். உத்ஸவருடன் சந்தான கோபாலனும் உள்ளார். பிள்ளைவரம் வேண்டுவோர், இவரைப் பிரார்த்தனை செய்தால், அவர்கள் வீட்டில் குழந்தைச் சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை.
🛕 Pilgrimage Guide
🙏 Prayer intention: குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள சந்தான கோபாலரை வேண்டிச் செல்கின்றனர்.
🕯️ Vow / offering: இங்குள்ள பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
🎉 Festivals
ராமநவமி, வைகுண்ட ஏகாதசி, பவுர்ணமி
Source: Dinamalar Temple Portal.
🕐 Opening Hours
⏰ +91 99628 11792
Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.
🚗 How to Reach
✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in நெற்குன்றம் or Chennai headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Chennai to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.
Distances and timings vary — please confirm locally before visit.
🏛️ Authority & Grievance
Operatorஇணை ஆணையர், சென்னை II
Listed contacts are public-office channels only. Grievance policy.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🤝 Improve This Page
📸 Missing a photo? Know updated pooja times? Found an error?
Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.