Arulmigu Iravisvarar Thirukoyil

Arulmigu Iravisvarar Thirukoyil

அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில், வியாசர்பாடி, சென்னை - 600039
🔱 Mathamma

வியாசர்பாடி
Chennai District, Tamil Nadu, India — 600039

📷 Photo Gallery

Arulmigu Iravisvarar Thirukoyil photo 1Arulmigu Iravisvarar Thirukoyil photo 2Arulmigu Iravisvarar Thirukoyil photo 3Arulmigu Iravisvarar Thirukoyil photo 4Arulmigu Iravisvarar Thirukoyil photo 5Arulmigu Iravisvarar Thirukoyil photo 6Arulmigu Iravisvarar Thirukoyil photo 7Arulmigu Iravisvarar Thirukoyil photo 8

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ OpensThe temple is open from 6.00 a.m. to 12.00 a.m. and from 4.00 p.m. to 9.00 p.m.
📞 Phone+91-44 2551 8049, 99418 60986.
🎉 Festivalஆனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், கந்தசஷ்டி, மகர சங்கராந்தி, மாசிமகம், பங்குனி உ
🙏 Prayer Intentionஅறியாமல் செய்த பாவம் நீங்க சிவனிடமும், அறிவுக்கூர் மையான குழந்தைகள் பிறக்க முனை காத்த பெருமாள், கல்வி, கலைகளில் சிறந்து
🕯️ Vow Ritualஇங்கு வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து வழிபடு
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில், சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைத்துள்ளனர

📍 Location

📍 Approximate location — Chennai, Tamil Nadu. Help us add precise coordinates →

வியாசர்பாடி
Chennai District, Tamil Nadu, India — 600039

📜 About this temple

சூரியபகவானின் மனைவியான சமுக்ஞா தேவி, அவரது உக்கிரம் தாங்காமல், தனது நிழல் வடிவை பெண்ணாக்கி சூரியனிடம் விட்டுச் சென்றுவிட்டாள். சாயா (நிழல்) தேவி எனப்பட்ட அவள், சமுக்ஞாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டாள். இதை அறிந்த சூரியன் அவளிடம் கேட்டபோது, சமுக்ஞாதேவி தன்னை பிரிந்து சென்றதை அறிந்தார். கோபம் கொண்ட சூரியன், சமுக்ஞாதேவியைத் தேடிச் சென்றார். வழியில் பிரம்மா, ஒரு யாகம் நடத்திக் கொண்டிருந்தார். மனைவியைத் தேடிச் சென்ற வேளையில், சூரியன் பிரம்மாவைக் கவனிக்கவில்லை. தன்னை சூரியன், அவமரியாதை செய்ததாக எண்ணிய பிரம்மா, அவரை மானிடனாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார். இந்த சாபம் நீங்க, நாரதரின் ஆலோசனைப்படி பூலோகம் வந்த சூரியன் இத்தலத்தில் ஒரு வன்னி மரத்தடியில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், சாபவிமோசனம் கொடுத்த ருளினார். சூரியனின் வேண்டுதலுக்காக சிவன், அந்த லிங்கத்தில் ஐக்கியமானார். சூரியனுக்கு விமோசனம் கொடுத்தவர் என்பதால், அவரது பெயரிலேயே "ரவீஸ்வரர்' (ரவி என்பது சூரியனின் ஒரு பெயர்) என்றும் பெயர் பெற்றார்.

அதிசயத்தின் அடிப்படையில்: சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில், சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைத்துள்ளனர். இதற்கு நேரே நந்தி இருக்கிறது. தினமும் காலையில் சூரியனின் ஒளி, சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

திருமண வரம் தரும் அம்பிகை: முற்காலத்தில் இங்கு சிவன் சன்னதி மட்டும் இருந்தது. இப்பகுதியை ஆண்ட வீச்சாவரன் என்னும் மன்னனுக்கு புத்திரப்பேறு இல்லை. தனக்கு அப்பாக்கியம் தரும்படி இங்கு சிவனை வேண்டினான். சிவன், அம்பிகையிடம் மன்னனின் மகளாகப் பிறக்கும்படி அருளினார். அதன்படி, மன்னனின் அரண்மனை நந்தவனத்திலுள்ள ஒரு மகிழ மரத்தினடியில் அம்பிகை குழந்தை வடிவில் தவழ்ந்தாள். அவளைக் கண்ட மன்னன், மரகதாம்பிகை என பெயர் சூட்டி வளர்த்தான். அவளும் இத்தலத்து இறைவன் மீது பக்தி கொண்டாள். அவளது திருமண வயதில் சிவன், அவளை மணந்து, தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார். இதன் பின்பு, இங்கு அம்பிகைக்கு சன்னதி எழுப்பப்பட்டது. சிவன், அம்பிகையை திருமணம் செய்த வைபவம் ஆனி மாத பிரம்மோற் ஸவத்தின்போது நடக்கிறது. தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருளும் அம்பிகை, திருமண பாக்கியம் தருபவளாக அருளுகிறாள். நவராத்திரி விழா இவளுக்கு 10 நாட்கள் எடுக்கின்றனர். இவ்விழாவின் பத்தாம் நாளில் "மகிஷன் வதம்' வைபவம் நடக்கும். அப்போது அம்பாள் சன்னதி எதிரில் ஒரு வாழை மரம் கட்டி, (வாழை மரத்தின் வடிவில் மகிஷன் இருப்பதாகக் கருதி), அதில் வன்னி இலையையும் சேர்த்துக்கட்டிவிட்டு, அம்பாள் சார்பாக வெட்டி விடுகின்றனர். இந்த வைபவம் இங்கு விசேஷமாக நடக்கும். முனை காத்த பெருமாள்: பதினென் புராணங்களையும், வேதங்களையும் இயற்றிய வேதவியாசர் வழிபட்ட தலம் இது. எனவே இத்தலம்

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: அறியாமல் செய்த பாவம் நீங்க சிவனிடமும், அறிவுக்கூர் மையான குழந்தைகள் பிறக்க முனை காத்த பெருமாள், கல்வி, கலைகளில் சிறந்து திகழ வேதவியாசரிடமும் வேண்டிக்கொள்கிறார்கள். நீண்ட நாட்களாக திருமணமாகாத பெண்கள் இங்குள்ள அம்பாளிடம் வேண்டிக்கொள்ள, அப்பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை. சிவன் சன்னதிக்கு பின்புறத்தில் வன்னி மரம் இருக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள், இம்மரத்திற்கு கீழேயுள்ள நாகருக்கு மஞ்சள்பொடி, பால் அபிஷேகம் செய்தும், பெண்கள் சுமங்கலிகளாக இருக்க தாலி கட்டியும் வேண்டிக்கொள்கி றார்கள்.
🕯️ Vow / offering: இங்கு வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர்.

🎉 Festivals

ஆனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், கந்தசஷ்டி, மகர சங்கராந்தி, மாசிமகம், பங்குனி உத்திரம்.

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The temple is open from 6.00 a.m. to 12.00 a.m
from 4.00 p.m. to 9.00 p.m

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in வியாசர்பாடி or Chennai headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Chennai to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஇணை ஆணையர், சென்னை I

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.