📜 About this temple
பல வருடங்களுக்கு முன்பாக காஞ்சி பெரியவர் சென்னை பரங்கிமலையில் இருக்கும் ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்கும் பொருட்டு தனது பக்தர்கள் புடைசூழ பாத யாத்திரையாக வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் திரிசூலம் சென்று அங்கு திரிசூலநாதரையும், திரிபுரசுந்தரியையும் தரிசித்து விட்டு வந்துகொண்டிருக்கும்போது பழவந்தாங்கலில் (தற்போது கோவில் அமைந்திருக்கும் பகுதி வழியாக) வந்து கொண்டிருக்கும்போது சற்று ஓய்வு கொள்ள எண்ணம் கொண்டவராய் ஒரு அரசமரத்தடியில் தங்கினார். உடன் வந்த பக்தர்கள் சற்று தள்ளி வேறு இடத்தில் அமர்ந்து கொண்டனர். அப்போது அவருக்கு சற்றே நாவறட்சி ஏற்பட்டு, தண்ணீர் பருக வேண்டும் என்று தோன்ற தனது சிஷ்யர் ஒருவரை அழைக்க, அது அவர் காதில் விழவில்லை. சிறிது நேரத்தில் ஒரு சின்ன சிறுமி கையில் தண்ணீர் சொம்புடன் மகாபெரியவர் முன்பாக வந்து இந்தாருங்கள் தண்ணீர் கேட்டீர்களே என்று கூறி கொடுத்தாளாம். அதை வாங்கிப் பருகிவிட்டு சொம்பை திருப்பிக் கொடுக்க சிறுமியை அவர் தேடியபோது அங்கு சிறுமியைக் காணவில்லை. உடனே தனது சிஷ்யரை அழைத்து விவரத்தை கூறி, யார் அந்த சிறுமி ? தண்ணீரை நீங்கள்தான் சிறுமியிடம் கொடுத்து அனுப்பினீர்களா ? என்று கேட்க, அவர்களோ இல்லையே, அந்த சிறுமி யாரென்றே தெரியாது என்று வியப்புடன் கூறினார்களாம். மகாப் பெரியவர் சற்றே கண் மூடி அமர்ந்திருந்தாராம். வந்தது சாட்சாத் அந்த அகிலமெல்லாம் காக்கும் அம்பிகையான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே என்பதை உண்ர்ந்தவராய் கிராம பெரியவர்களையும், ஊர் மக்களையும் அழைத்து இந்த இடத்தில் அம்பிகை எங்கோ புதைந்து கிடக்கிறாள். உடனே தோண்டி கண்டுபிடியுங்கள் என்று சொல்லிவிட்டு மகாபெரியவர் ஸ்ரீநந்தீஸ்வரரை தரிசிக்கச் சென்று விட்டார். கிராமப் பெரியவர்கள் அந்த இடத்தைத் தோண்ட, முதலில் அம்பிகையின் குழந்தை வடிவிலான விக்ரகமும், சண்டிகேஸ்வரி விக்ரகமும் கிடைக்கப் பெற்று மிகவும் மகிழ்வுற்று அதை ஜகத்குருவிடம் சென்று தெரிவித்தனர். பரம சந்தோஷம் அடைந்த பெரியவர் விக்ரகபிரதிஷ்ட்டை செய்து அம்பிகைக்கு ஸ்ரீ வித்யாராஜராஜேஸ்வரி என்ற திருநாமத்தை வைத்து வழிபட உத்தரவிட்டார்.
மாசி மாதத்தில் ஆறு நாட்கள் சூரிய பகவான் காலை சுமார் ஆறு மணி அளவில் தனது சூரியக் கதிர்களை அம்பிகையின் மீது பாய்ச்சி ஜொலிக்கச் செய்யும் அற்புதம் ஒவ்வொரு வருடமும் நடக்கின்றது. ஈஸ்வரனுக்கு எப்படி சண்டிகேஸ்வரர் இருக்கின்றாரோ அதுபோல சண்டிகேஸ்வரி சன்னதியும் இங்கு காண்பது சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).