🛕 Arulmigu Prasanna Vengatesa Narasimma Swamy Temple

அருள்மிகு பிரசன்ன வெங்கடேச நரசிம்ம ஸ்வாமி கோயில், Saidapet, Chennai - 600015
🔱 Prasanna Vengatesa Narasimma Swamy

📜 About this temple

சுமார் 700 வருடங்களுக்கு முன்பு, கோயிலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்ற பொழுது ஓரிடத்தில் பள்ளம் தோண்ட, அதில் இருந்து தாயாரின் விக்கிரகத் திருமேனி மற்றும் பெருமாளின் பஞ்சலோக விக்கிரகம் ஆகியவை கிடைத்தன. ஆகவே, அந்த விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள். தேசாய் பிரிவில், குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் திருவேங்கடவன் குடிகொண்டிருக்கும் திருப்பதிக்கும் நரசிம்மர் அருளும் சோளிங்கருக்கும் அடிக்கடி சென்று தரிசனம் செய்து வருவர். எனவே, இங்கே பிரதிஷ்டை செய்த பெருமாளுக்கு, பிரசன்ன வேங்கட நரசிங்க பெருமாள் எனும் திருநாமத்தைச் சூட்டினர். சக்கரத்தாழ்வாரை வணங்கிச் செல்ல தினமும் ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். சக்கரத்தாழ்வாரின் திருமேனி முன்னே இருக்க... பின்னே அதே விக்கிரகத்தில் நரசிம்மர் காட்சி தருகிறார். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சக்கரதாழ்வாருக்கு துளசி மாலை சார்த்தி, பிரகார வலம் வந்து வேண்டிக் கொண்டால், நினைத்ததெல்லாம் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம்! மேலும், பிரசன்ன வேங்கடேச பெருமாள் எனும் திருநாமத்துடன் திகழும் பெருமாளைத் தரிசனம் செய்தால், திருப்பதி மற்றும் சோளிங்கருக்குச் சென்று தரிசித்த பலன் கிட்டும் என பக்தர்கள் கூறுகின்றனர்.

தாயார் மற்றும் பெருமாளின் திருமேனி பூமியில் இருந்து கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).