🛕 Arulmigu Dhandumariamman Temple

அருள்மிகு தண்டுமாரிஅம்மன் கோயில்&nbsp, வடகோவை, கோவை - 641043
🔱 Dhandumariamman

📜 About this temple

வணிகம் புரிவதற்காக வந்து நாட்டைக் கைப்பற்றிய வெள்ளையர்களிடம் இருந்து போரிட்டு, நாட்டை மீட்கப் போராடிய திப்பு சுல்தான் தனது படைவீரர்களை கோவை கோட்டை மதில்களுக்கிடையில் ஓர் கூடாரத்தில் தங்க வைத்திருந்தார். அங்கு தங்கியிருந்த வீரர்களில் ஒருவன் அம்பாளின் மீது மிகுந்த பக்தி கொண்டு அவளை தினமும் வணங்கி வந்தான். அப்போது, ஒருநாள் இரவில் அவனது கனவில் தோன்றிய மாரியம்மன், தான் வீரர்கள் குடியிருக்கும் பகுதியில் வேப்பமரங்களுக்கும், காட்டுக்கொடிகளுக்கும் இடையே இருந்த நீர்ச்சுனைக்கு அருகில் நீண்ட காலமாக வசித்து வருவதை உணர்த்தி தன்னை அங்கேயே வழிபடும்படி கட்டளையிட்டாள். கனவில் அம்பாளின் அரிய திருமேனியைக் கண்ணுற்ற அவ்வீரன் மறுநாள் காலையில், அம்பாள் வீற்றிருப்பது போல் உணர்த்திய இடத்திற்கு சென்று வேப்பமரங்களின் இடையே தேடினான். அப்போது அங்கே கனவில் கண்ட தெய்வமாக அம்பாள் அங்கே வீற்றிருந்தாள். அங்கேயே அம்பாளை வணங்கிய அவன் சக படைவீரர்களுக்கும் கனவில் தோன்றி அருள்புரிந்த அம்மன் வீற்றிருந்த இடத்தை காண்பித்தான். பின், படை வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி இவ்விடத்தில் ஆதியில் சிறிய மேடை போல அமைத்து வழிபட்டு காலப்போக்கில் பெரிய கோயிலாக எழுப்பினர். தண்டு(தங்கு) இடமாக இருந்துள்ளதால் இந்த அம்மன் தண்டு மாரியம்மன் என அழைக்கப்படுகிறது.

இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).