📜 About this temple
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பர். ஆனால் தாய் தந்தையுடன் அருள்பாலிக்கும் ஓர் அற்புத தலமாக விளங்குகின்றது மாதப்பூர் முத்து குமார சுவாமி கோயில். ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ள அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பழமையான கற்கோயில். இத்தலம் அமைந்துள்ள இடம் பல்லடம்-காங்கேயம் நெடுஞ்சாலையில் உள்ள (என்ஹச்-67) மாதப்பூர் எனும் கிராமம். மாதப்பூர் எனும் பெயருக்கு இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஞான பழத்துக்காக கோபித்துக்கொண்ட முருகன் பழநிமலையில் அமர்ந்தார். அவரைத் தேடிவந்த சிவனும் பார்வதியும் இக்குன்றின் மீது ஏறி நின்று மகனே நீ எங்கே இருக்கின்றாய்? என குரல் எழுப்பிய போது பழநியில் அமர்ந்திருந்த முருகன் தாய், தந்தையருக்காக இங்கு காட்சியளித்ததாக ஸ்தல வரலாற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன. மாதாவுக்கு மகன் மகன் காட்சியளித்ததால் மாதா ஊர் என வழங்கப்பட்டு பின் மருவி மாதப்பூர் என ஆனது. மாதாவின் அன்பைப் பெற்றதால் முருகனே மாதாவின் பெயரில் மாதா ஊர் என அழைத்ததாகவும் செவி வழிச் செய்தி உள்ளது. திப்பு சுல்தான் ஆட்சி செய்த காலம். ஒருமுறை பாலக்காட்டில் இருந்து மைசூருக்கு படை, பரிவாரங்களுடன் சென்றான். அப்போது பின்னால் வந்த படைவீரர்களை காணவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தேடினான். பின் உயரமான இக்குன்றின் மீது ஏறி தேடியுள்ளான். அச் சமயத்தில் சுயம்புவான முருகன் மீது ஏறி நின்று பார்த்துள்ளான். இதனால் கோபம் அடைந்த முருகன் திப்பு சுல்தான் கண் பார்வையை பறித்து விட்டார். மிகவும் துயரமும் வேதனையும் அடைந்தான். கண்பார்வை பறிபோனது தெய்வ குற்றம் என்பதை உணர்ந்து மனம் வருந்தினான். தன் தவறை உணர்ந்தான். இறைவனிடம் மன்றாடி, தன்னை மன்னித்து அருளுமாறு வேண்டினான், முருகனும் மனமிறங்கி அவனை மன்னித்து அருளி மீண்டும் கண்பார்வையை அளித்தார். மனமகிழ்ந்த திப்புசுல்தான் முருகனுக்கு ஒரு கோயில் எழுப்புவதாக வாக்களித்து அவ்வாறே தாய் தந்தையருக்கும் சேர்த்து கோயில்களை கட்டிக் கொடுத்தார். படம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
பழநிமுருகன் போலவே மாதப்பூர் முருகனும் ஒரே உருவ ஒற்றுமையுடன் உள்ளதே சிறப்பம்சமாகவும். அதுமட்டுமின்றி முருகன் தாய், தந்தையருடன் அமர்ந்துள்ள இடம் என்பதால் இது மிகவும் சிறப்புமிக்கதாகும்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).