📜 About this temple
கோவை மாநகரை அடுத்து உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி குருஅடிமலை, வைணவ குருவான ராமானுஜர் திருஅடிபட்டதால் குருஅடிமலை என வழங்கப்படுகிறது. குரு அடிமலை மற்றும் அருகே உள்ள பாலமலை ஆகிய மலைகளிலிருந்து மழைக் காலங்களில் பெருகி வரும் வெள்ள நீர் இரு காட்டாறுகளாக இடிகரை எனும் ஊரின் வடபகுதியில் ஒன்றும் தென்பகுதியில் ஒன்றும் ஆக ஓடி, ஊரைத் தாண்டி கிழக்கு திசையில் இரு ஆறுகளும் ஒன்று சேருகின்றன. இரு கரைகளுக்கு நடுவே அமைந்த ஊர்ப்பகுதி இருகரை என காரணப் பெயராய் அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் மருவி இடிகரை என்றாகிவிட்டது. இவ்வூரில் அமைந்துள்ள திவ்ய வைணவத் தலம் பள்ளி கொண்ட ரங்கநாத சுவாமி திருக்கோயிலாகும்.கி .பி. 1070 முதல் 1116 வரை ஆண்ட சோழ மன்னன், தவறான சிலரின் வழிகாட்டுதலின் பேரில் வைணவத்தின் மீது வெறுப்பு கொண்டான். வைணவத்தை வளர்த்தவரும், தலைமை பீடத்தை அலங்கரித்த வருமான ராமானுஜரையும் வைணவத்தையும் அழிக்க பல கொடுமைகளைச் செய்தான். சோழ மன்னரின் எண்ணத்தை அறிந்த ராமானுஜரின் பிரதம சீடரான கூரத்தாழ்வார் குருவின் காவி வேஷ்டியையும், அவரது திரிதண்டத்தையும் ஏந்தி தானே ராமானுஜர் எனக் கூறிக் கொண்டு சோழ மன்னனின் அரசவைக்குச் சென்றார். அரசவையில் தர்க்கம் செய்து அனைவரையும் வென்று, வைணவ சமயத்தை நிலைநாட்டினார். அதனைப் பொறுக்காத மன்னன் கூரத்தாழ்வார் மற்றும் ராமானுஜரின் ஆச்சாரியார் பெரிய நம்பிகள் ஆகியோர் கண்களைப் பிடுங்க ஆணையிட்டான். ஆனால் கூரத்தாழ்வார் கோபத்துடன் தன் கண்களைப் பறித்து சோழ மன்னன் மீது வீசிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார். தன் ஆடைகளை கூரத்தாழ்வார் அணிந்து சென்றதால், ராமானுஜர் கூரத்தாழ்வாரின் வெள்ளை வஸ்திரத்தை அணிந்து தன் சீடர்களுடன் கொங்கு நாட்டில் உள்ள பாலமலை, குருஅடிமலை, காரமடை சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள பெருமாளை தரிசித்து விட்டு வைணவத்தையும் வளர்த்து வந்தார். ஆங்காங்கே தன் சீடர்களை நிறுத்தி வைணவத்தை வளர்க்க உத்தரவிட்டார். ஸ்ரீரங்கத்தை விட்டு ராமானுஜர் வந்த சிஷ்யர்கள் குருஅடிமலை, பாலமலை, பெட்டாதாபுரம் ஆகிய இடங்களில் உள்ள குகைகளில் மறைந்திருந்து அரங்கனை சுயம்பாக வழிபட்டு வந்தனர். ராமானுஜருடன் வந்த வைணவ பிராமணர்கள் இடிகரை பகுதிக்கு வந்தனர். செழிப்பானதும், பாதுகாப்பான இடம் என்பதையும் உணர்ந்தனர். மேலும் இரு ஆறுகளுக்கு நடுவே அதமந்திருந்ததால் ஸ்ரீரங்கத்தை ஒத்து இருந்தது. எனவே இவ்வூரில
இத்தலத்தில் உள்ள சடாரி 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வைத்ய வீர ராகவ ஸ்வாமி கோயில் பிரம்மோற்சவ யாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பெருமாளோடு சேர்த்து ஆராதிக்கப்பட்டதாகும். எனவே இங்கு சடாரி சேவை சாதித்துக் கொள்பவர்கள் சகல நோய்களிலிருந்தும் குணமடைந்து நலம் பெறுகின்றனர்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).