🛕 Arulmigu Pettai Maha Mariamman Temple

அருள்மிகு பேட்டை ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயில், Mettupalayam - 642110

📜 About this temple

பூவுலகில் அனைத்து உயிர்களுக்கும் வரமளித்துக் காத்தருளும் அன்னை, பேட்டை மகாமாரியம்மன் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலம், மேட்டுப்பாளையம். சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமங்கலத்திலிருந்து புன்செய்ப்புளியம்பட்டி, இரும்பறை, சிறுமுகை வழியாக மேட்டுப்பாளையத்தில் உள்ள காய்கறி சந்தைக்கு வாரந்தோறும் மாட்டு வண்டிகளில் காய்கறிகள் வருவது வழக்கம். ஒருநாள் வழியில் சற்று ஓய்வெடுத்துவிட்டு வியாபாரிகள் புறப்படும் சமயம் தன் வண்டியில் காய்கறிக்கூடைகளுக்கு அருகே எலுமிச்சை, மல்லிகைப்பூ, நீளமான கல் ஆகியவை இருப்பதைக் கண்ட வண்டிக்காரர் ஒருவர், மற்றவர்களுக்கு அதைக் காட்டினார். இவை வண்டியில் எப்படி வந்தன எனப் புரியாமல் அனைவரும் குழம்ப, அவற்றை எடுத்து கீழே வைத்து விட்டார் வண்டிக்காரர். பின்னர் அனைவரும் வண்டியில் மாட்டைப் பூட்டிக் கிளம்ப, அவர் வண்டியின் மாடுகளால் ஒரு அடிகூட நகரமுடியவில்லை. பயந்துபோன அவர்கள் கீழே வைத்த எலுமிச்சை, மல்லிகைப்பூ, நீளமான கல் ஆகியவற்றை எடுத்து மீண்டும் அதே வண்டியில் வைக்க, இப்போது மாடுகள் நகர்ந்தன. காய்கறிக்கூடைகளை சந்தையில் இறக்கிவிட்டு, மாடுகளை வண்டியிலிருந்து அவிழ்த்துக் கட்டிவிட்டு, எலுமிச்சை, மல்லிகைப்பூ, நீளமான கல் ஆகியவற்றை அருகிலிருந்த வேப்பமரத்தடியில் வைத்து, தெய்வமே தவறு ஏதேனும் இருந்தால் என்னை மன்னித்து விடு என கையெடுத்துக் கும்பிட்டார். அப்போது இந்த வேப்பிலைக்காரியை சரியான இடத்தில்தான் அமர்த்தியுள்ளாய். நான் மகாமாரியாக இங்கு வீற்றிருந்து அருள்பாலிப்பேன் என அசரீரி வாக்கு கேட்க, அந்த இடத்தை சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினார். விஷயம் ஊர் மக்களுக்கு தெரியவர, பச்சைப் பந்தல் போட்டு அம்பிகையை வணங்கிவந்தனர். இப்படியே பல ஆண்டுகள் கடந்த நிலையில் சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியைச் சேர்ந்த பெரியவர் ஒருவரின் கனவில் சிறுமி உருவில் தோன்றிய அம்மன், இன்னும் எத்தனை காலம்தான் என்னை இப்படியே வழிபடுவீர்கள் உங்களுக்கு என்ன குறை வைத்தேன் எனக்கு ஒரு கோயில் கட்ட முடியாதா எனக் கேட்டாள். கனவில் அம்மன் வந்த விஷயத்தை பெரியவர் காலையில் அனைவரிடமும் சொல்ல, ஊர் மக்கள் கோயிலை விரைவில் கட்டி, அம்மனுக்கு சிலை வடித்து, கருவறையில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினர். தெய்வாம்சம் பொருந்திய அந்த நீளமான கல்லை அம்மனுக்கு முன்பு வைத்து, ஆதிமூலவராக

மூலவர் அம்மனுக்கு முன்பாக சுயம்பு வடிவிலும் அம்மன் அருள்பாலிப்பது சிறப்பு

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).