
பெரியகுமட்டி
Cuddalore District, Tamil Nadu, India — 608503
📍 Approximate location — Cuddalore, Tamil Nadu. Help us add precise coordinates →
பெரியகுமட்டி
Cuddalore District, Tamil Nadu, India — 608503
அதிசயத்தின் அடிப்படையில்: யோக பட்டை அணிந்து கைகளில் அட்சமாலை, சூலத்துடன் தெட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான வடிவம் இங்கு உள்ளது.
Source: Dinamalar Temple Portal.
மூதாட்டியாக வந்த அம்பிகை: வணிகன் ஒருவன், வியாபாரத்திற்காக 7 வண்டிகளில் மிளகு மூடைகளை ஏற்றிக்கொண்டு இவ்வழியே சென்றான். அவன் இப்பகுதியைக் கடந்தபோது, அம்பிகை ஒரு மூதாட்டியின் வடிவில் அவன் முன் சென்றாள். "தம்பி இந்த மூடையில் என்னப்பா வைத்திருக்கிறாய்? எனக்கு பசியாக இருக்கிறது. அதில் ஏதாவது சாப்பிட இருந்தால் கொடுப்பா!' என்றாள். வியாபாரி அவளிடம், மூடையில் கரிக்கட்டைகள் இருப்பதாக பொய் சொல்லி விட்டுச் சென்று விட்டான். அவன் சந்தைக்குச் சென்றபோது, மிளகு மூடைகள் கரிக் கட்டையாகவே மாறியிருந்தது. இதனால், அதிர்ந்துபோனவன் மீண்டும் இங்கு வந்தான். அம்பிகை அவன்முன் மறுபடியும் மூதாட்டியாகத் தோன்றினாள். தன்னை மன்னிக்கும்படி வியாபாரி வேண்டினான். அவள் கரிக்கட்டைகள் மீண்டும் மிளகுகளாக மாற்றி அருள்புரிந்தாள். அதன்பின் வணிகன் இக்கோயிலுக்கு திருப்பணி செய்து, அம்பாளுக்கு சிலை வடித்தான். விசேஷ தெட்சிணாமூர்த்தி: பிரதான சன்னதியில் வடக்கு நோக்கி சப்தகன்னியர் உள்ளனர். இவர்களில் நடுவில் உள்ள அம்பிகையை, கிளியாளம்மனாக வழிபடுகிறார்கள். சிவனுடன் போட்டியிட்ட அம்பிகை, சிவனின் சக்தியே ஆவாள். இதனால், இவள் சிவசொரூபம் ஆகிறாள். இதனடிப்படையில் அம்பாள் சன்னதி எதிரே நந்தி உள்ளது. முன் மண்டபத்தில் யோக பட்டை அணிந்து கைகளில் அட்சமாலை, சூலத்துடன் தெட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான வடிவம் உள்ளது. கோயிலில் இருந்து சற்று தூரத்தில், ரோட்
ஆவணியில் நடக்கும் 8 நாள் திருவிழாவில் அம்பிகைக்கு விசேஷ பூஜை நடக்கும். இந்நாட்களில் அம்பிகை சிம்ம வாகனத்தில் புறப்பாடாவாள். வெள்ளிக்கிழமைகளிலும் விசேஷ பூஜை உண்டு.
Source: Dinamalar Temple Portal.
Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.
Distances and timings vary — please confirm locally before visit.
Listed contacts are public-office channels only. Grievance policy.
📸 Missing a photo? Know updated pooja times? Found an error?
Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.