Arulmigu Marghgha Jhaghayesvarar Thirukoyil

Arulmigu Marghgha Jhaghayesvarar Thirukoyil

அருள்மிகு மார்க்க சகாயேஸ்வரர் திருக்கோயில், ஒரத்தூர் - 608201
🔱 Angalamman

ஒரத்தூர்
Cuddalore District, Tamil Nadu, India — 608201

📷 Photo Gallery

Arulmigu Marghgha Jhaghayesvarar Thirukoyil photo 1Arulmigu Marghgha Jhaghayesvarar Thirukoyil photo 2Arulmigu Marghgha Jhaghayesvarar Thirukoyil photo 3Arulmigu Marghgha Jhaghayesvarar Thirukoyil photo 4Arulmigu Marghgha Jhaghayesvarar Thirukoyil photo 5Arulmigu Marghgha Jhaghayesvarar Thirukoyil photo 6Arulmigu Marghgha Jhaghayesvarar Thirukoyil photo 7Arulmigu Marghgha Jhaghayesvarar Thirukoyil photo 8

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ OpensThe temple is open from morning 6’o clock till 11.00 and from 5.30 pm up to 8.00
📞 Phone+91 505 33249, 96002 05958
🎉 Festivalசிவராத்திரி, திருக்கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை
🙏 Prayer Intentionபயம் போக, மனக்குறை நீங்கி நிம்மதி பெற வழிபட வேண்டிய தலம்
🕯️ Vow Ritualநெய் தீபமேற்றி, சர்க்கரைப் பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் அமைப்பில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி

📍 Location

📍 Approximate location — Cuddalore, Tamil Nadu. Help us add precise coordinates →

ஒரத்தூர்
Cuddalore District, Tamil Nadu, India — 608201

📜 About this temple

திருத்தல யாத்திரை சென்ற சுந்தரர், விருத்தாச்சலம் சென்றார். அவர் இத்தலத்தைக் கடந்தபோது வழி தெரியவில்லை. எனவே, ஓரிடத்தில் அப்படியே நின்று விட்டார். தனக்கு வழி காட்டும்படி சிவனை வேண்டினார். அப்போது, அவர் முன் வந்த முதியவர் ஒருவர், "அடியவரே, காட்டுப்பாதையில் பாதியிலேயே நின்று விட்டீரே. எங்கு போகவேண்டும்?' என விசாரித்தார். அவர் தனக்கு பாதை தெரியாததைச் சொன்னார். முதியவர் அவரிடம் தான் வழி காட்டுவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார். கூடலையாற்றூர் தலம் வரையில் அவருடன் சென்று, அங்கிருந்து வழியைக் காட்டினார். சுந்தரர் அவருக்கு நன்றி சொல்ல முயன்றபோது, அவர் மறைந்து விட்டார். அவர் குழப்பமாக நின்றவேளையில், சிவன் தானே வந்து வழி காட்டியதை உணர்த்தினார். மகிழ்ந்த சுந்தரர் பதிகம் பாடினார். சுந்தரருக்கு வழிகாட்டிய சிவன் இத்தலத்தில் அருளுகிறார். மார்க்கம் என்றால் வழி. எனவே, இத்தல இறைவனுக்கு "மார்க்கசகாயேஸ்வரர்' என்று பெயர். வழித்துணைநாதர் என்றும் இவருக்குப் பெயருண்டு.

அதிசயத்தின் அடிப்படையில்: திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் அமைப்பில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி சன்னதியின் முன்புறம் இருக்கிறார்.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

வழித்துணைவர்: இவ்வூரின் எல்லையில் ஓடும் வெள்ளாறு நதி, இங்கு மட்டும் வளைந்து ஓடுகிறது. இந்நதிக்கரையில் அமைந்த கோயில் இது. வாழ்க்கை மீதான பயம் உள்ளோர் தெளிவு கிடைக்க, தங்கள் நட்சத்திர நாள் அல்லது ஏதேனும் ஒரு திங்களன்று இங்கு வந்து, சிவன் சன்னதியில் நெய் தீபமேற்றி, சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகிறார்கள். "திக்கற்றோருக்கு தெய்வமே துணை!' என்பர். வாழ்வில் திசை தெரியாமல், குழப்பத்தில் இருப்போர் மனக்குறை நீங்கி, நிம்மதி பெறுவதற்காக வழிபட வேண்டிய விசேஷ தலம் இது.அம்பாள் மரகதவல்லி தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறாள். நவராத்திரி நாட்களில் இவள் ஊஞ்சலில் எழுந்தருளி காட்சி தருவாள். இந்நாட்களில் இவளுக்கு அபிராமி அந்தாதி பாடி விசேஷ பூஜை நடக்கும். ஆடி, தை வெள்ளியில் இவளுக்கு விளக்கு பூஜை நடக்கும். முன் மண்டபத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. இவரது பாதத்திற்கு கீழேயுள்ள முயலகன், முகத்தைத் தூக்கி, சுவாமியின் பாதத்தை பார்த்தபடி இருக்கிறான். மார்கழி திருவாதிரையன்று நடராஜருக்கு விசேஷ பூஜை நடக்கும். பிரகாரத்தில் உள்ள நால்வர் சன்னதியில் குருபூஜை வைபவம் விசேஷமாக நடக்கும். பங்குனி உத்திரத்தன்று முருகன் புறப்பாடாவார்.

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: பயம் போக, மனக்குறை நீங்கி நிம்மதி பெற வழிபட வேண்டிய தலம்
🕯️ Vow / offering: நெய் தீபமேற்றி, சர்க்கரைப் பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

🎉 Festivals

சிவராத்திரி, திருக்கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The temple is open from morning 6’o clock till 11.00
from 5.30 pm up to 8.00pm

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in ஒரத்தூர் or Cuddalore headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Cuddalore to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஇணை ஆணையர், கடலூர்

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.