🛕 Arulmigu Renuka Parameswari Amman Temple

அருள்மிகு ரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில்,சித்தாலப்பாடி, சித்தாலப்பாடி - 608401
🔱 Renuka Parameswari

📜 About this temple

காடு, மேடு, கரடு, முரடான பகுதியில் முதல் முதலில் 50 குடும்பங்கள் குடிசை வீட்டில் வசித்தனர். அப்பகுதி மக்கள் சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மனை வணங்கி வந்தனர். அப்பகுதியில் திடீரென வயிற்றுப் போக்கு மற்றும் காலரா நோய் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் அம்மனிடம் வேண்டுதல் செய்தனர். அதன் கீழத்தெருமாரியம்மன் கோயிலில் இருந்து கலசம் எடுத்து வந்து தற்போது கோயில் உள்ள இடத்தில் வைத்துவழிபாடு நடத்தினர். அதன் பின் அப்பகுதியில் அம்மன் காவல் தெய்வமாக விளங்கியதுடன், பக்தர்கள் வேண்டியது நிறைவேறியது. அதன் பின் அப்பகுதியினர் வரிவசூல் செய்து கோயில் கட்டினர். கோயில் கட்டிய பின் அப்பகுதியில் இருந்த அனைத்து வீடுகளும் மாடி வீடுகளாக அமைந்துள்ளது. செல்வ செழிப்பும் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் பிறந்த பெண்கள் திருமணமாகி வெளியூர், வெளிநாட்டில் இருந்தாலும் திருவிழாவிற்கு வந்து செல்கின்றனர். இப்பகுதியில் இது வரை எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை இதற்கு அம்மன் தான் காரணம், அம்மன் இரவு நேரத்தில் நகரை சுற்றி வந்து காவல் பார்த்து வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். பக்தர் வேண்டுதல் உடன் நிறைவேற்றாவிட்டால் அவரது கனவில் தோன்றி இவற்றை செய் என உத்தரவிடுவதாவும் பக்கதர்கள் கூறுகின்றனர். அதிகளவில் உற்ற பிற தெய்வங்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். அப்பகுதி ஊராட்சித் தலைவர் சொந்த செலவில் முகப்பு மண்டபம் கட்டியுள்ளார்.

The Temple Is Open From 7.00 A.M. To 11.00 A.M. And From 4.00 P.M. To8.00 P.M.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).