📜 About this temple
சிதம்பரத்தில் இருந்து இரண்டு கி.மீ.,தொலைவில் உள்ளது கொத்தங்குடி கிராமம். இப்பகுதியில் இருந்த நஞ்சை நிலத்தில் இ டம் வாங்கி அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தார் முத்தையா செட்டியார் பெயரில் நகர் அமைத்தனர். துவக்கத்தில் 25 குடும்பங்கள் மட்டும் வசித்தனர். 1995 ஆம் ஆண்டு கல்வி கற்றவர்கள் மற்றும் பல்கலைக்கழகம் மற்றும் அரசு ஊழியர்கள் சேர்ந்து ஊரும் பேரும் இல்லாததது பரம்பொருள், எங்கும் வியாபித்திருப்பது. சாதாராண மனிதருக்கு எளிதில் அறிந்து கொண்டு வழிபட இயலாத படி உள்ளது. அத்தகைய பரம்பொருளுக்கு ஊரையும் பெயரையும் சூட்டி ஓரிடத்தில் திரட்டி தங்கள் உணர்வுகளை மனமுருகி சொல்ல ஏதுவான இடமாக நிறுவியதே கோயில். செல்வங்களையும், வளங்களையும், கல்வியையும் வழங்கும் முதற் கடவுளான விநாயகரை வணங்க திட்டமிட்டு யோசித்ததின் விளைவால் இக்கோயில் உருவாகியது. அதற்கு செல்வமுத்து விநாயகர் என்ற பெயர் சூட்டினர். உள்ளங்கனிந்து உருகி வழிபடுவோரின் வேண்டுதல்களை கருணையோடு நிறைவேற்றி வருகிறார். கமிட்டித் தலைவர்கள் கோயிலை பராமரித்து வருகின்றனர். 12 ஆண்டிற்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தி வருகின்றனர்.
சித்திரை 1–10 தேதிக்குள் விநாயகர் மீது சூரிய ஒளி விழும் காட்சி சிறப்புக்குரியதாகும்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).