Arulmigu Sundareshwarar Thirukoyil

Arulmigu Sundareshwarar Thirukoyil

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நெய்வாசல் - 608303
🔱 Sanjeevirayar PerumalPrivate Temple🎶 Tevaram Sthalam

நெய்வாசல்
Cuddalore District, Tamil Nadu, India — 608303

📷 Photo Gallery

Arulmigu Sundareshwarar Thirukoyil photo 1Arulmigu Sundareshwarar Thirukoyil photo 2Arulmigu Sundareshwarar Thirukoyil photo 3Arulmigu Sundareshwarar Thirukoyil photo 4Arulmigu Sundareshwarar Thirukoyil photo 5Arulmigu Sundareshwarar Thirukoyil photo 6Arulmigu Sundareshwarar Thirukoyil photo 7Arulmigu Sundareshwarar Thirukoyil photo 8

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ OpensThe temple is open from 6.00 a.m. to 12.00 a.m. and from 4.30 p.m. to 8.30 p.m.
📞 Phone+91- 94425 71039, 94439 06219
🎉 Festivalவைகாசி திருவாதிரை, ராஜராஜனுக்கு 13 நாள் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, ஒவ்வொரு வர
🙏 Prayer Intentionவேண்டியதை எல்லாம் கொடுக்கும் இறைவன்.
🕯️ Vow Ritualசிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.
🎵 Praised by Saintsஅப்பர், சம்பந்தர் தேவாரப்பதிகம் தீவினை யாயின தீர்க்கநின்றான் திருநாரை யூர்மேயான் பூவினை மேவு சடைமுடி
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் வி

📍 Location

📍 Approximate location — Cuddalore, Tamil Nadu. Help us add precise coordinates →

நெய்வாசல்
Cuddalore District, Tamil Nadu, India — 608303

📜 About this temple

கோபக்காரரான துர்வாச முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் செய்து கொண்டிருந்தார். தனது தவத்திற்கு இடையூறு செய்த கந்தர்வன் ஒருவனை நாரையாகும்படி சாபமிட்டார். கந்தர்வன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான். முனிவர் மறுத்து விட்டார். எனவே இத்தல சிவனிடம் முறையிட்டு கதறினான். சிவன் அவனிடம், தினமும் காசியிலிருந்து இத்தலத்துக்கு தீர்த்தம் கொண்டு வந்து தன்னை வழிபட்டால் சாபவிமோசனம் கிடைக்கும், என்றார். நாரை வடிவிலிருந்த கந்தர்வனும் தன் சக்தியால், அதிவேகத்தில் பறந்து சென்று தீர்த்தத்தை அலகில் சுமந்து வந்து அபிஷேகம் செய்தான். இதன்பிறகு சிவன் நாரைக்கு முக்தி கொடுத்தார்.

அதிசயத்தின் அடிப்படையில்: முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதி விநாயகரின் ஆறாவது படை வீடாகும். பொல்லாப்பிள்ளையார் சுயம்பு விநாயகராக அருள்பாலிக்கிறார்.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

பொல்லாப்பிள்ளையார்: நம்பியாண்டார் நம்பியின் தந்தை இங்குள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். அவருடன் தினமும் வரும் நம்பியாண்டார் நம்ப இதைப் பார்ப்பார். அப்பா வைக்கும் நைவேத்தியத்தை பிள்ளையார் சாப்பிடுவாரா? என அவருக்கு திடீரென சந்தேகம் வந்தது. தன் தந்தைக்கு பின் நம்பி கோயிலுக்கு பூஜை செய்யும் காலம் வந்தது. அப்போது தன் தந்தையைப்போல் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து, பிள்ளையாரை சாப்பிடும்படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் சாப்பிட்டார். திருமுறை தந்த தலம்: ஸ்ரீநம்பியாண்டார் நம்பியின் சிறப்புகள் இராஜ ராஜ சோழனின் காதுகளுக்கு எட்டியது. சைவ திருமுறைகளின் இருப்பிடம் தேடி அவற்றைத் தொகுக்கும் மாபெரும் பணியை முடித்துவிட வேண்டும் என்ற அவனது நெடுநாளைய ஆசைக்கு ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையாரின் ஆசி வேண்டி வந்தான். இராஜ ராஜ சோழனின் காணிக்கைகளையும் நைவேத்தியங்களையும் நம்பியின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து ஏற்றார், ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார். திருமுறை இருக்கும் இடம் காட்டி அருள வேண்டும் என்று இராஜ ராஜனும், நம்பியும் வேண்ட தில்லை ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் தென்மேற்கு மண்டபத்தில் சுவடிகள் கிடைக்கும் என தெய்வவாக்கு ஒலித்தது. (இன்று சிதம்பரம் ஸ்ரீநடராஜர் ஆலயத்தின் மேற்கு உள் பிரகாரத்தில் ஸ்ரீதிர

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: வேண்டியதை எல்லாம் கொடுக்கும் இறைவன்.
🕯️ Vow / offering: சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.

🎉 Festivals

வைகாசி திருவாதிரை, ராஜராஜனுக்கு 13 நாள் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, ஒவ்வொரு வருடமும் வைகாசித் திங்கள் புணர்பூச நட்சத்திரத்தில் (ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி முக்தி அடைந்தநாள்)நம்பி குருபூஜை விழா சிறந்த திருமுறைவிழாவாகக்கொண்டாடப்படுகின்றது

🎵 Hymned by Saints

அப்பர், சம்பந்தர் தேவாரப்பதிகம் தீவினை யாயின தீர்க்கநின்றான் திருநாரை யூர்மேயான் பூவினை மேவு சடைமுடியான் புடைசூழப் பலபூதம் ஆவினில் ஐந்துங்கொண் டாட்டு கந்தான் அடங்கார் மதில்மூன்றும் ஏவினை யெய்தழித் தான்கழலே பரவா எழுவாமே. - திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 33வது தலம்.

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The temple is open from 6.00 a.m. to 12.00 a.m
from 4.30 p.m. to 8.30 p.m

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in நெய்வாசல் or Cuddalore headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Cuddalore to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஇணை ஆணையர், கடலூர்

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.