Arulmigu Venughobhalajhami Thirukoyil

Arulmigu Venughobhalajhami Thirukoyil

அருள்மிகு வேணுகோபாலசாமி திருக்கோயில், பிஞ்சனுர் - 606104
Private Temple

பிஞ்சனுர்
Cuddalore District, Tamil Nadu, India — 606104

📋 Temple Details

⏰ OpensThe temple is open from 5.30 a.m. to 9.30 a.m. and from 5.00 p.m. to 8.00 p.m.
🎉 Festivalராவநவமி, வைகுண்ட ஏகாதசி
🙏 Prayer Intentionமன நிம்மதி, வழக்குகளில் வெற்றி, திருமணப் பேறு, பிள்ளைப் பேறு கிடைக்க இங்கு வழிபட்டுச் செல்கின்றனர்.
🕯️ Vow Ritualசுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புதுவஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: ராமர் சயனக்கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.

📍 Location

📍 Approximate location — Cuddalore, Tamil Nadu. Help us add precise coordinates →

பிஞ்சனுர்
Cuddalore District, Tamil Nadu, India — 606104

📜 About this temple

கிரேதா யுகம், திரேதா யுகம், துவார யுகம், கலியுகம் என யுகங்கள் நான்கு. இவற்றில் மூன்று யுகங்களோடு தொடர்புடையதாக விளங்குகிறது வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி ஆலயம். இவ்வாலயத்தில் திரேதா யுகத்தை நினைவுபடுத்தும் வகையில் அனந்தசயன ராமர் உள்ளார். துவாபர யுகத்தின் அடிப்படையில் வேணுகோபால சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். திரேதா யுகத்தில்தான் ராமபிரான் இலங்கை சென்று சீதாதேவியை மீட்டு வந்தார். அவ்வாறு திரும்பும்போது ராமேஸ்வரத்தில் சிவபூஜை முடித்துவிட்டு சித்ரகூடம் (சிதம்பரம்) வழியாக வந்துகொண்டிருந்தார். சீதாதேவியை இராவணன் கடத்திச் சென்றது முதலே ராமபிரானுக்கு ஓய்வு உறக்கமில்லை. அதன் முடிவில் இராவணனுடைய கடும்போரும் செய்தார். இவையெல்லாம் அவரிடம் களைப்பை ஏற்படுத்தியிருந்த காரணத்தால் சற்று இளைப்பாற எண்ணி தரையில் படுக்கச் சென்றார். இதைக் கண்டு மனம் பதைத்த லட்சுமணன் தன் முந்தைய வடிவான ஆதிசேஷன் உருவமெடுத்து, உடலை மெத்தையாகவும் சிரசை குடையாகவும் விரித்துப் படுக்க, அதன்மீது ராமபிரான் மேற்கு-கிழக்காக பள்ளி கொண்டார். சீதாதேவி அருகே இருந்து அவர் கால்களைப் பிடித்துவிட்டாள். அதே நேரத்தில் அயோத்தியிலிருந்த பரதன், குறித்த நேரத்தில் அண்ணன் வந்து சேரவில்லையே என மனம் வெதும்பி, தீ வளர்த்து அதற்குள் இறங்கி உயிர்விட ஆயத்தமானான். களைப்பால் சற்று கண்ணயர்ந்தபோதும் தன் உள்ளுணர்வால் இதையறிந்த ராமபிரான் உடனே கண்விழித்து, தான் சீதையுடன் வந்து கொண்டிருக்கும் செய்தியை பரதனிடம் காற்றினும் கடிது சென்று தெரிவிக்குமாறு அனுமனிடம் ஆணையிட்டார். அவ்வாறே சென்று அனுமனும் பரதனின் உயிரைக் காத்தான்.

அதிசயத்தின் அடிப்படையில்: ராமர் சயனக்கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

இங்குள்ள ஸ்ரீராமனின் சயனக் கோலம். ஆதிசேஷன்மீது ஸ்ரீராமன் படுத்திருக்க, கால்பகுதியில் சீதை இருக்க, புறப்பட யத்தனிக்கும் தோரணையில் அனுமனும் உள்ளது அற்புதமான காட்சி, இந்த சந்நிதி வேணுகோபால சுவாமி சந்நிதிக்கு வடக்கே அமைந்துள்ளது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் இவ்வாலயம் அமைக்க திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவிலுக்கு மேற்கேயுள்ள ஒரு பகுதியில் அனந்தசயன ராமர் உள்ளிட்ட சிற்பங்கள் செய்யப்பட்டன. செய்து முடித்து அவற்றை ஆலயத்துக்குக் கொண்டுவரும் வழியில் ராமரின் விக்ரகம் மட்டும் பூமியில் புதைந்துவிட்டதாம். எனவே திருப்பணிகள் அப்படியே நின்றுவிட்டன. பல ஆண்டுகள் கடந்தன. சிற்றரசன் ஒருவன் தன் ஆட்சிக்குட்பட்ட இந்தப் பகுதியை தன் மகள் வேங்கடம் மாவுக்கு சீதனமாக வழங்கினான். அந்த இளவரசி நின்றுபோன கோவில் திருப்பணிகளை மீண்டும் தொடங்கி நிறைவேற்றி முடித்தாள். மூலவராக வேணுகோபால சுவாமி, தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். இதே காலகட்டத்தில் ஊருக்கு மேற்கே விவசாயி ஒருவர் தன் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது கலப்பை எதிலோ சிக்க, காளைகள் அப்படியே நின்றுவிட்டன. உடனே அந்த விவசாயி மண்ணை அகழ்ந்து பார்க்க, அங்கே சயன ராமர் விக்ரகம் இருப்பதைக் கண்டார். பின்னர் ஊர் மக்கள் ஒத்துழைப்போடு சயன ராமர் ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டார். கலியுக வரலாற்றின்படி ஐயப்பன் அவதாரத்தின் பொருட்டு மோகினி வடிவம் எடுத்தார் மகாவ

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: மன நிம்மதி, வழக்குகளில் வெற்றி, திருமணப் பேறு, பிள்ளைப் பேறு கிடைக்க இங்கு வழிபட்டுச் செல்கின்றனர்.
🕯️ Vow / offering: சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புதுவஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

🎉 Festivals

ராவநவமி, வைகுண்ட ஏகாதசி

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The temple is open from 5.30 a.m. to 9.30 a.m
from 5.00 p.m. to 8.00 p.m

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in பிஞ்சனுர் or Cuddalore headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Cuddalore to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஇணை ஆணையர், கடலூர்

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.