🛕 Arulmigu Venugopalasamy Temple

அருள்மிகு வேணுகோபாலசாமி திருக்கோயில், பிஞ்சனுர் - 606104
🔱 Venugopalaswamy

📜 About this temple

கிரேதா யுகம், திரேதா யுகம், துவார யுகம், கலியுகம் என யுகங்கள் நான்கு. இவற்றில் மூன்று யுகங்களோடு தொடர்புடையதாக விளங்குகிறது வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி ஆலயம். இவ்வாலயத்தில் திரேதா யுகத்தை நினைவுபடுத்தும் வகையில் அனந்தசயன ராமர் உள்ளார். துவாபர யுகத்தின் அடிப்படையில் வேணுகோபால சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். திரேதா யுகத்தில்தான் ராமபிரான் இலங்கை சென்று சீதாதேவியை மீட்டு வந்தார். அவ்வாறு திரும்பும்போது ராமேஸ்வரத்தில் சிவபூஜை முடித்துவிட்டு சித்ரகூடம் (சிதம்பரம்) வழியாக வந்துகொண்டிருந்தார். சீதாதேவியை இராவணன் கடத்திச் சென்றது முதலே ராமபிரானுக்கு ஓய்வு உறக்கமில்லை. அதன் முடிவில் இராவணனுடைய கடும்போரும் செய்தார். இவையெல்லாம் அவரிடம் களைப்பை ஏற்படுத்தியிருந்த காரணத்தால் சற்று இளைப்பாற எண்ணி தரையில் படுக்கச் சென்றார். இதைக் கண்டு மனம் பதைத்த லட்சுமணன் தன் முந்தைய வடிவான ஆதிசேஷன் உருவமெடுத்து, உடலை மெத்தையாகவும் சிரசை குடையாகவும் விரித்துப் படுக்க, அதன்மீது ராமபிரான் மேற்கு-கிழக்காக பள்ளி கொண்டார். சீதாதேவி அருகே இருந்து அவர் கால்களைப் பிடித்துவிட்டாள். அதே நேரத்தில் அயோத்தியிலிருந்த பரதன், குறித்த நேரத்தில் அண்ணன் வந்து சேரவில்லையே என மனம் வெதும்பி, தீ வளர்த்து அதற்குள் இறங்கி உயிர்விட ஆயத்தமானான். களைப்பால் சற்று கண்ணயர்ந்தபோதும் தன் உள்ளுணர்வால் இதையறிந்த ராமபிரான் உடனே கண்விழித்து, தான் சீதையுடன் வந்து கொண்டிருக்கும் செய்தியை பரதனிடம் காற்றினும் கடிது சென்று தெரிவிக்குமாறு அனுமனிடம் ஆணையிட்டார். அவ்வாறே சென்று அனுமனும் பரதனின் உயிரைக் காத்தான்.

ராமர் சயனக்கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).