
Arulmigu Anjhaneyar Thirukoyil
அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், அனைப்பட்டி - 624219
🔱 VinayagarPrivate Temple
அனைப்பட்டி
Dindigul District, Tamil Nadu, India — 624219
📋 Temple Details
⏰ Opens+91 97860 40907
📞 Phone+91 97860 40907
🎉 Festivalஅனுமன் ஜெயந்தி, சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை ஆகியவை முக்கிய திருவிழா. அமாவாசை கா
🙏 Prayer Intentionவீரம், நல்ல புத்தி, கலங்காத மனம், புத்தி சாதுர்யம், நல்ல படிப்பு, உடல் பலம், செய்யும் செயல்களில் வெற்றி ஆகியவற்றை தருவார
🕯️ Vow Ritualஅனுமன் ஜெயந்தியன்று முழு விரதம் இருக்க இயலாதவர்கள் பழம் மட்டும் சாட்பிட்டு ஸ்ரீராம ஜெயம் எழுதலாம். ஆ
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: பெயருக்கேற்றாற்போலவே இந்த ஆஞ்சநேயர் நின்ற திருகோலத்தில் தன் வீரத்திற்கு அற
📜 About this temple
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அம்மையநாயக்கனூர் ஜமீன்தாரான காமயசாமியின் கனவில் வீர ஆஞ்சநேயர் தோன்றி, வேகவதி ஆற்றின் தென்கரையில் (வைகை ஆற்றின் புராணப்பெயர்) தாழம்பூ புதருக்குள் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதாககவும், ஆலயம் அமைத்து வழிபடும்படியும் கூறினார். ஆஞ்சநேயரின் கட்டளைப்படி புதரை சுத்தம் செய்து பார்த்த போது சிறிய பாறை தென்பட்டது. அதை தோண்டி எடுக்க முயன்றும் முடியவில்லை. அதுவே வீர ஆஞ்சநேயராக சுயம்புவாக மாறியது. பின்னர் அந்த இடத்தில் கோயில் அமைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
அதிசயத்தின் அடிப்படையில்: பெயருக்கேற்றாற்போலவே இந்த ஆஞ்சநேயர் நின்ற திருகோலத்தில் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நிற்கிறார். அதேசமயம் அனுமனின் பக்தியும், கருணையும் வெளிப்படும் வகையில், ஒரு கண் அயோத்தியை பார்ப்பது போலவும், ஒரு கண் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உதவும் கருணையுடன் பார்ப்பது போலவும் அமைந்துள்ளது.
Source: Dinamalar Temple Portal.
🔱 Temple Lore & Pilgrimage
✨ Sthala Greatness
வாயு மைந்தனான ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்த போதே சூரிய பகவானை பழம் என்று நினைத்து அதைப்பறிக்க வானில் தாண்டிக்குதித்தவர். ராமனின் அடிமையாக திகழ்ந்த இவர் "ஸ்ரீராமஜெயம்' எழுதுபவர்களை பல இன்னல்களிலிருந்து காக்கிறார். ராமாயணமோ அல்லது ராமனின் பெருமைகளோ கூறும் இடங்களில் எல்லாம் அனுமன் இருப்பார். அந்த அளவுக்கு ராமர் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். வீர ஆஞ்சநேயர் :பெயருக் கேற்றார்போலவே இந்த ஆஞ்சநேயர் நின்ற திருகோலத்தில் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நிற்கிறார். அதேசமயம் அனுமனின் பக்தியும், கருணையும் வெளிப்படும் வகையில், ஒரு கண் அயோத்தியை பார்ப்பது போலவும், ஒரு கண் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உதவும் கருணையுடன் பார்ப்பது போலவும் அமைந்துள்ளது. ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியம் என்பதால் இங்கு நவக்கிரக பீடம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர், நாகர், சப்த கன்னிகள், கருப்பணசாமி தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
🛕 Pilgrimage Guide
🙏 Prayer intention: வீரம், நல்ல புத்தி, கலங்காத மனம், புத்தி சாதுர்யம், நல்ல படிப்பு, உடல் பலம், செய்யும் செயல்களில் வெற்றி ஆகியவற்றை தருவார். பணி மாற்றம் விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நல்ல பலன் உண்டு என பலன் அடைந்தவர்கள் கூறுகின்றனர்.
🕯️ Vow / offering: அனுமன் ஜெயந்தியன்று முழு விரதம் இருக்க இயலாதவர்கள் பழம் மட்டும் சாட்பிட்டு ஸ்ரீராம ஜெயம் எழுதலாம். ஆஞ்சநேயர் பாடல்கள் பாடலாம். ஆஞ்சநேயர் கோயில் சென்று வழிபட்டு வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றி வழிபடலாம்.
🎉 Festivals
அனுமன் ஜெயந்தி, சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை ஆகியவை முக்கிய திருவிழா. அமாவாசை காலங்களிலும் சனி மற்றும் புதன் கிழமைகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகம்.
Source: Dinamalar Temple Portal.
🕐 Opening Hours
⏰ +91 97860 40907
Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.
🚗 How to Reach
✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in அனைப்பட்டி or Dindigul headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Dindigul to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.
Distances and timings vary — please confirm locally before visit.
🏛️ Authority & Grievance
Operatorஇணை ஆணையர், திண்டுக்கல்
Listed contacts are public-office channels only. Grievance policy.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🤝 Improve This Page
📸 Missing a photo? Know updated pooja times? Found an error?
Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.