🛕 Arulmigu Mahalingeswarar Temple

Arulmigu Mahalingeswarar Temple, Odukam - 624101

📜 About this temple

சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய ராமர், தேவ குருவின் புத்திரரான பரத்வாஜரை சந்தித்தார். அவரது உபசரிப்பை ஏற்றார். அவர்களுடன் ஆஞ்சநேயரும் வந்திருந்தார். அப்போது, தனக்கு உதவிய ஆஞ்சநேயருக்கு மரியாதை செய்யும் விதமாக, தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கத்திலிருந்த உணவை அவரை உண்ணும்படி பணித்தார். இந்நிகழ்விற்குப் பிறகுதான் வாழை இலையின் நடுவில் கோடு வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்று கூறுகிறது. இத்தகு சிறப்பு மிக்க பரத்வாஜர் இத்தலத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது. மதுரையில் மீனாட்சியை பிரதிஷ்டை செய்த ஐந்து முனிவர்களில் இவரும் ஒருவர். இதனால் மீனாட்சிக்கு "பஞ்ச ராஜ மாதங்கி' என்றும் பெயர் ஏற்பட்டது.

சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு. பொதுவாக, ஒரு சன்னதிக்குள் ஒரு அம்பிகைதான் இருப்பாள். ஆனால், திண்டுக்கல் அருகிலுள்ள ஒடுக்கம் தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயிலில், ஒரே சன்னதிக்குள் இரண்டு அம்பிகையரை தரிசிக்கலாம்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).