🛕 Arulmigu Periya Avudayar Temple

அருள்மிகு பெரிய ஆவுடையார் திருக்கோயில், கோதைமங்கலம் - 624703
🔱 Periya Avudayar

📜 About this temple

பழநி நகரில் எழுந்தருளி பெரியநாயகிக்கு நாயக்கர் காலத்தில் கோயில் கட்டப்பட்டது. ஆனால் சிவபெருமானோ தன்னை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட திருவிளையாடல் புரிந்தார். விராட மகாராஜாவுக்கு வேட்டையாடுவது என்றால் மிகவும் விருப்பம். ஒருநாள் சிவன் மான் உருவம் கொண்டு மன்னன் முன்பு தோன்றினார். மானின் அழகில் மயங்கிய மன்னன் அதைப்பிடிக்க வேண்டி துரத்தினான். மானும் மன்னனின் பிடியில் சிக்காமல் லிங்க வடிவில் வீற்றிருக்கும் புதர் அருகில் வந்து மறைந்து கொண்டது. மானை காணாததால் கோபம் கொண்ட மன்னன் வில்லில் அம்பேற்றி புற்றில் செலுத்தினான். அங்கு ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அம்பு செலுத்திய புற்றிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. பயந்து போன மன்னன் புதரை விலகி பார்த்த போது, அம்பு புதருக்குள் இருந்த லிங்கத்தின் மீது பட்டு ரத்தம் வடிந்தது. இறைவனிடம் மண்டி போட்டு, அறியாமல் செய்த தவறுக்கு மன்னிக்கும் படி வேண்டினான் மன்னன். இறைவனும் அசரீரியாக தம்மை வெளிப்படுத்தவே இப்படி திருவிளையாடல் புரிந்தோம் என்று கூறினார். இறைவனின் கட்டளைப்படியே மன்னனும அந்த இடத்தில் கற்ப கிரகம் அமைத்து பூஜை செய்து வந்தான். மன்னன் மானைத்துரத்தி வந்ததால் இந்த ஊர் மானூர் ஆனது. லிங்கத்தின் அம்பு பட்ட தழும்பு அபிஷேகத்தின் போது இப்போதும் காணலாம்.

லிங்கத்தின் அம்பு பட்ட தழும்பு அபிஷேகத்தின் போது இப்போதும் காணலாம்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).