Arulmigu Bhaladhandhayudhabhanijhami Thirukoyil

Arulmigu Bhaladhandhayudhabhanijhami Thirukoyil

அருள்மிகு பாலதண்டாயுதபாணிசாமி திருக்கோயில், சித்தோடு, ஈரோடு - 638102
🔱 VinayagarPrivate Temple

சித்தோடு
Erode District, Tamil Nadu, India — 638102

📋 Temple Details

⏰ OpensThe temple is open from 6.00 a.m. to 11.00 a.m. and 4.00 p.m. to 8.00 p.m.
📞 Phone+91-4285-222 125
🎉 Festivalஅமாவாசை, மாத கிருத்திகை, சஷ்டி, தைப்பூசம், பங்குனி, உத்திரம் ஆகிய சிறப்புமிக்க த
🙏 Prayer Intentionநோயுற்றவர்கள் கோயில் மண்டபத்தில் தங்கி தரிசித்து வழிபாடு செய்கின்றனர் இதன்மூலம் குணம் பெற்று செல்பவர்கள் தங்கள் நேர்த்தி
🕯️ Vow Ritualசுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
🌟 Specialtiesபச்சைமலை குன்றில் பாலமுருகனாகவும், பவளமலை குன்றில் முத்துக்குமார சுவாமியாகவும், ஆண்டவர்மலை குன்றில்

📍 Location

📍 Approximate location — Erode, Tamil Nadu. Help us add precise coordinates →

சித்தோடு
Erode District, Tamil Nadu, India — 638102

📜 About this temple

பல ஞானிகள் முருகனின் அருளை வெளிப்படுத்தி உணர்த்தியுள்ளனர். ஆதார மூலக்கோயிலின் கால அளவை நிர்ணய படுத்த முடியாத அளவிற்கு ஆண்டவர் மலை முருகன் கோயில் பழமை வாய்ந்தது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இக்குன்றில் குடிகொண்ட முருக பெருமானை போற்றி வணங்கி பூசாரி சித்தர் என்பவர் பக்தர்களுக்கு அருள்வாக்கு கொடுத்து வந்தார். அதன் பின்னர் குப்பணசித்தர் என்பவர் காற்று ஆதாரத்துடன் பல காலங்கள் அருள் பாலித்து வந்தார். கடந்த 1980ம் ஆண்டு கோயில் திருப்பணிகள் துவங்கப்பட்டது. தொடர்ந்து பத்து வருடங்களாக கோயில் திருப்பணிகள் நடந்து 1990ம் வருடம் நிறைவு பெற்றது.

பச்சைமலை குன்றில் பாலமுருகனாகவும், பவளமலை குன்றில் முத்துக்குமார சுவாமியாகவும், ஆண்டவர்மலை குன்றில் பால தண்டாயுதபாணி சுவாமியாகவும் வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை வழங்கி பக்தர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விளங்குகிறார்.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

ஆண்டாண்டு காலங்களாக ஆன்றோரும், சான்றோரும் வழி வழியாய் வழிபடும் அற்புத ஸ்தலமாக கோபிசெட்டிபாளையம் ஆண்டவர் மலை முருகன் கோயில் திகழ்கிறது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடிகொண்டிருப்பான் என்பதை உணர்த்தும் விதத்தில் கோபியில் உள்ள மூன்று குன்றுகளிலும் முருகப்பெருமான் வெவ்வேறு ரூபங்களில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோபியில் பச்சைமலை, பவளமலை, ஆண்டவர்மலை என மூன்று குன்றுகள் இயற்கையாகவே அமையப்பெற்றுள்ளது. பச்சைமலை குன்றில் பாலமுருகனாகவும், பவளமலை குன்றில் முத்துக்குமார சுவாமியாகவும், ஆண்டவர்மலை குன்றில் பால தண்டாயுதபாணி சுவாமியாகவும் வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை வழங்கி பக்தர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விளங்குகிறார். சங்க இலக்கியம், தமிழ்ச்சங்கம், சங்கத்தமிழ் ஆகிய எல்லா சூழ்நிலைகளிலும் போற்றி புகழப்படும் தெய்வம் முருகப்பெருமான். சிவபெருமானின் ஐந்து முகச்சுடரும், நெற்றி கண்ணின் சுடரும் சேர்ந்து ஆறுபொறிகளால் உதித்தவர் ஆறுமுகன். சமயங்கள் 6, கோஷங்கள் 6, ஆதார கமலங்கள் 6, வேத இதிகாசங்கள் 6, ஞான சாதனை 6, சாஸ்திரம் 6 ஆகிய ஆறு அம்சங்களும் முருகப்பெருமானுக்கு உரியவை.இப்படிப்பட்ட கருணைக்கடலாக விளங்கும் பாலதண்டாயுதபாணி சுவாமி ஆண்டவர் மலை குன்றில் நின்றகோலத்தில் வீற்றிருந்து வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை வாரி வழங்கி அருள்பொழிந்து வருகிறார்.

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: நோயுற்றவர்கள் கோயில் மண்டபத்தில் தங்கி தரிசித்து வழிபாடு செய்கின்றனர் இதன்மூலம் குணம் பெற்று செல்பவர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி நலம்பெறுகின்றனர்.
🕯️ Vow / offering: சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

🎉 Festivals

அமாவாசை, மாத கிருத்திகை, சஷ்டி, தைப்பூசம், பங்குனி, உத்திரம் ஆகிய சிறப்புமிக்க திருவிழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தினமும் மூன்று கால பூஜைகள் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு செய்யப்படுகிறது.

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The temple is open from 6.00 a.m. to 11.00 a.m
4.00 p.m. to 8.00 p.m

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in சித்தோடு or Erode headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Erode to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஇணை ஆணையர், ஈரோடு

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.