Arulmigu BhRiya Mariamman Thirukoyil

Arulmigu BhRiya Mariamman Thirukoyil

அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில், ஒழலக்கோயில் - 638458
Private Temple

ஒழலக்கோயில்
Erode District, Tamil Nadu, India — 638458

📷 Photo Gallery

Arulmigu BhRiya Mariamman Thirukoyil photo 1Arulmigu BhRiya Mariamman Thirukoyil photo 2Arulmigu BhRiya Mariamman Thirukoyil photo 3Arulmigu BhRiya Mariamman Thirukoyil photo 4Arulmigu BhRiya Mariamman Thirukoyil photo 5Arulmigu BhRiya Mariamman Thirukoyil photo 6Arulmigu BhRiya Mariamman Thirukoyil photo 7

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ OpensThe temple is open from 6.00 a.m. to 11.00 a.m. and 4.p.m. to 8.00 p.m.
📞 Phone+91-424-2258670
🎉 Festivalஇக்கோயிலின் முக்கிய திருவிழா பங்குனி தேர்த்திருவிழாவாகும். ஒவ்வொரு பங்குனி மாதத்
🙏 Prayer Intentionவெப்பு சம்பந்தமான அம்மை, கொப்புளம் போன்ற நோய்கள் வராமல் பெரிய மாரியம்மன் அருள்பாலிக்கிறாள். பிள்ளையில்லா குறைதீரவும் அம்
🕯️ Vow Ritualசுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: இந்நகரில் சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், கொங்கலம்மன் கோயில், கரு

📍 Location

📍 Approximate location — Erode, Tamil Nadu. Help us add precise coordinates →

ஒழலக்கோயில்
Erode District, Tamil Nadu, India — 638458

📜 About this temple

இக்கோயில் ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன் இங்கு ஆட்சி செய்த கொங்கு சோழர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாறு கூறுகிறது.

அதிசயத்தின் அடிப்படையில்: இந்நகரில் சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், கொங்கலம்மன் கோயில், கருங்கல்பாளையம். சின்னமாரியம்மன், சூரம்பட்டிவலசு மாரியம்மன் என ஏராளமான மாரியம்மன் கோயில்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் தலைவியாக பெரிய மாரியம்மன் அருள்பாலிக்கிறாள். பொங்கல் துவங்கி மஞ்சள் நீராட்டு விழா வரை இளைஞர்களும், பெரியவர்களும், மகளிரும் மாறுவேடமணிந்து கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பம்சமாகும்.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

கோயிலின் முற்பகுதியில் சிங்க வாகனமும், தூரியும் அழகுற விளங்குகிறது. வேப்பமரத்தை தலவிருட்சமாக கொண்டது இக்கோயில். இங்கு பரசுராமர் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் காலை 7 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 7.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. பூச்சாட்டுதல் தொடங்கி கம்பத்தை எடுத்து வாய்க்காலில் விடுவது வரை பெரிய மாரியம்மன் கோயில், சின்னமாரியம்மன் கோயில், வாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் விழா இணைந்தே நடந்து வருகிறது. பெரிய மாரியம்மன் திருவிழா என்பது ஈரோடு நகரத்தின் மிகப் பெரிய திருவிழாவாகும். ஜாதி, மதம், இன வேறுபாடின்றி ஈரோட்டில் வாழ்கிற அனைத்து மக்களும் பங்கு கொள்கின்ற விழாவாகும். மக்கள் குழுக்களாக கூடி இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், பட்டிமன்றங்கள், கவியரங்கம், கருத்தரங்கம், பொம்மலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். பொங்கல் துவங்கி மஞ்சள் நீராட்டு விழா வரை இளைஞர்களும், பெரியவர்களும், மகளிரும் மாறுவேடமணிந்து கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பம்சமாகும். மூன்று கோயில்களிலும் உள்ள கம்பங்களை எடுத்து வாய்க்காலில் விடும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கம்பங்களுக்கு மஞ்சள் நீர் வார்த்து பயபக்தியுடன் வழிபாடு செய்வர். மக்கள் ஒருவர்மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வது வடநாட்டு ஹோலி பண்டிகையை நினைவூட்டும்.

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: வெப்பு சம்பந்தமான அம்மை, கொப்புளம் போன்ற நோய்கள் வராமல் பெரிய மாரியம்மன் அருள்பாலிக்கிறாள். பிள்ளையில்லா குறைதீரவும் அம்மனை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
🕯️ Vow / offering: சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

🎉 Festivals

இக்கோயிலின் முக்கிய திருவிழா பங்குனி தேர்த்திருவிழாவாகும். ஒவ்வொரு பங்குனி மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை விழா ஆரம்பித்து அன்று இரவு பூச்சாட்டுதல் நடைபெறும். பின் அதை தொடர்ந்து கம்பம் நடுதல், மாவிளக்கு, கரகம் எடுத்தல், பொங்கல், தேரோட்டம் இறுதியாக கம்பத்தை எடுத்து காரை வாய்க்காலில் விடுதல் முதலிய நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகிறது.

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The temple is open from 6.00 a.m. to 11.00 a.m
4.p.m. to 8.00 p.m

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in ஒழலக்கோயில் or Erode headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Erode to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஉதவி ஆணையர், ஈரோடு

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.