🛕 Arulmigu Karuppannasamy Temple

அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில், வேட்டுவபாளையம், Vettuvapalayam - 638057
🔱 Karuppannasamy

📜 About this temple

ஈரோடு நகரின் காவல் தெய்வமாக விளங்குவது பொய்யேரிக்கரை கருப்பண்ணசாமி. ஈரோடு பெரியார் நகரில் இவருக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் உயரமான திட்டில் அமைந்துள்ளது. மூவாயிரம் ஆண்டு தொன்மை கொண்ட ஈரோடு நகரம் மாபெரும் மன்னர்கள் கோட்டை கட்டி கொற்றம் செலுத்திய ஊர்.ஈரோடை ஆண்ட கலியுக மன்னர் காலத்தில் பெரிய ஏரி அமைத்து நீரை தேக்கி வைத்தனர். விவசாயிகள் மதகு வழியாக நீரை பயன்படுத்தி வந்தனர். பின்னர் வேளாளர்கள் ஏரியை பாதுகாக்க வேண்டி ஏரிக்கரையில் கருப்பண்ணசாமி, கன்னிமார், மகாமுனி மற்றும் பல மூர்த்திகளை ஏற்படுத்தி தங்கள் குலதெய்வங்களாக வழிபட்டு வந்தனர். நாளடைவில் இந்த ஏரியானது பொய்யேரிக்கரை என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது. இத்திருக்கோயிலில் தல விருட்சமான வெள்ளை வேலாமரம் கருப்பண்ணசாமி மற்றும் கன்னிமார் தெய்வங்களுக்கு பின்னால் உயரமான திட்டில் இருக்கிறது.

கருப்பண்ணசாமி வீராவேசத்துடனும், கன்னிமார் தெய்வங்கள் அமைதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. முருகன் சன்னதியில் இருந்து கீழே இறங்கி, வடக்கு புறவாசல் வழியாக வெளியே சென்றால் கோயிலை வலம் வந்தது போல உள்ள அமைப்பை பெற்றிருப்பது இதன் சிறப்பாகும்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).