🛕 Arulmigu Pananthur Mariamman Temple

அருள்மிகு பனந்தூர்மாரியம்மன் திருக்கோயில், Gobichettipalayam - 638452

📜 About this temple

பவானி நதிக்கரையில் உள்ள வீரபாண்டி கிராமம் நீர் வளமும், நிலவளமும் மிகுந்த பகுதி. அருகிலுள்ள கிராம விவசாயிகள் கால்நடைகளை மேய்க்க இப்பகுதிக்கு வருவர். ஒருமுறை, கால்நடைகளை மேய்க்க வந்த சிறுவர்கள், விளையாடிக் கொண்டிருந்த போது, அங்குஇருந்த வேப்பமரங்களின் நடுவே பிரகாசமான ஒளி தோன்றியது. அவர்கள் பயந்து ஓட முயன்றனர். அப்போது அசரீரி ஒலித்தது. குழந்தைகளே! நில்லுங்கள். நானும் உங்களுடன் விளையாட வந்துள்ளேன். தினமும் இங்கே நாம் அனைவரும் விளையாடலாம், என ஒலித்தது. உடனே பெரும் காற்று வீசியது. தூசி துகள் பறந்து அந்த இடமே சுத்தமாயிற்று, வேப்பமரத்தின் இலைகள் சில உதிர்ந்து ஒரு சிறிய கல்லைச் சுற்றி விழுந்தது. அந்தக்கல்லை எடுக்க அச்சிறுவர்கள் முயன்றனர். ஆனால், அதைத் தூக்க முடியவில்லை. அப்போது அசரீரி மீண்டும் ஒலித்தது. குழந்தைகளே! நான் இவ்விடத்தில் குழந்தையாக இருக்கப் போகிறேன், கல் இருக்கும் இடத்தில் எனக்கு கோயில் கட்டி வழிபட்டால் இவ்வூரை மட்டுமின்றி என்னை வழிபட எங்கிருந்து யார் வந்தாலும் காப்பாற்றுவேன், என்றது. சிறுவர்கள் தங்கள் பெற்றோரிடம் விபரத்தைக் கூறினர். அதே நாளில் குறிப்பிட்ட இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என ஊர் பெரியவர்கள் கனவு கண்டனர். இதையடுத்து, 1917ல் சிறிய கோயில் கட்டப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகிறது.

இங்குள்ள அம்மன் சுயம்புவாக தோன்றி குழந்தை வடிவில் காட்சி தருவது கோயிலின் சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).