📜 About this temple
கன்று ஈன்ற பசு ஒன்று காட்டில் மேய்ந்து விட்டு தினசரி பாலின்றி வெற்று மடியோடு வீட்டுக்கு வந்துள்ளது. பசுவின் உரிமையாளர் ரகசியமாக சென்று பார்த்தார். அப்போது, ஒருபுற்று அருகே பசு சென்றது. புற்றிலிருந்து ஐந்து தலை நாகமொன்று வெளிப்பட்டு பசுவின் ஐந்து மடிகளிலிருந்தும் பாலைக் குடித்தது. இதைப்பார்த்ததும் பசுவின் உரிமையாளர் அதிர்ந்தார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய ஒரு பெண் நான் பத்ரகாளி, நான் உன் பசுவின் பால் குடித்து மனநிறைவு பெற்றேன், என்னை இவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபடுக, என்றாள். அம்மனின் அருள்வாக்கை ஏற்று அந்த இடத்தில் பக்தர்கள் கோயில் கட்டி வழிபடத் துவங்கினர். அம்பாளுக்கு பத்ரகாளி என்ற பெயர் சூட்டப்பட்டது. பெயர் விளக்கம்: பத்ரம் என்ற சொல் இலை, அழகிய உருவம், பாதுகாப்பு என்ற பொருள்களைத் தருகிறது. பத்ரகாளி என்ற சொல்லுக்கு இலைத்தோடு அணிந்த காளி, அழகிய தோற்றமுடைய காளி, மக்களைப் பாதுகாக்கும் சக்தி என்ற பொருள்கள் உண்டு.
கருவறையில் பத்ரகாளியம்மன் எட்டு கைகளுடன் அருள்பாலிக்கிறாள். சுடர் விட்டு பரவும் ஜூவாலை கொண்ட தலை, மண்டை ஓடு கீரிடம், எட்டு கைகளில் உடுக்கை, கட்கம், கபாலம், சூலம், மகிஷனின் தலைமேல் கால் வைத்திருக்கும் பாவனை, விஸ்மய ஹஸ்தம் (செயற்கரிய செயல்களை செய்யும் போது வியந்து பாராட்டும் சிறப்பம்சம்) நாகம், மணி, கிண்ணத்துடன் அம்மன் அருள்பாலிக்கிறாள். பகைவர்களின் தலைகளை மாலையாக தொடுத்து அதையே மார்புக்கச்சாக கட்டியிருக்கிறாள். மகிஷனின் தலையில் கால் வைத்துள்ளதால், நவராத்திரி நாயகியான மகிஷாசுரமர்த்தினியாகவும் கருதப்படுகிறாள்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).