Arulmigu Ponkaliamman Temple

Arulmigu Ponkaliamman Temple

Arulmigu Ponkaliamman Temple, - 638152
🔱 KaruppannasamyPrivate Temple

Erode District, Tamil Nadu, India — 638152

📷 Photo Gallery

Arulmigu Ponkaliamman Temple photo 1Arulmigu Ponkaliamman Temple photo 2Arulmigu Ponkaliamman Temple photo 3Arulmigu Ponkaliamman Temple photo 4

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ OpensThe temple is open from 6.00 a.m. to 11.00 a.m. and 4.00 p.m. to 8.00 p.m.
📞 Phone+91-4285-222 010
🎉 Festivalமார்கழி தேர்த்திருவிழா (குண்டம் இறங்குதல்) 5 நாள் திருவிழா 10 லட்சத்துக்கும் அதி
🙏 Prayer Intentionஇத்தலத்தின் கொண்டத்துக்காரியை வணங்குவோர்க்கு திருமண பாக்கியம், குழந்தை வரம், விவசாய செழிப்பு ஆகியவற்றைத் தருவதோடு பில்லி
🕯️ Vow Ritualஅக்னி குண்டம் இறங்குதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், அம்மனுக்கு விளக்கு போடுதல் ஆகியவை முக்கிய நேர்த
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் அம்மன் ருத்ரகோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அக்னிகுண்

📍 Location

📍 Approximate location — Erode, Tamil Nadu. Help us add precise coordinates →

Erode District, Tamil Nadu, India — 638152

📜 About this temple

பாரியூரில் இன்று பெரும் புகழ் பெற்று விளங்கும் கொண்டத்து காளியம்மன் கோயில எப்பொழுது அமைக்கப்பட்டது என்பதற்கு சான்று ஏதும் கிடையாது. இக்கோயில் 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சரித்திரப்புகழ் பெற்ற கோயிலாக இருக்க வேண்டும் பல நூற்றாண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்த கோயில் பின்பு அப்பகுதி முக்கியஸ்தர்களால் மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் சூரராச் சித்தர் என்பவர் மந்திர சக்தி படைத்தவராக இருந்துள்ளார். மந்திரசக்தியினால் அவருக்கு அன்னை காட்சி தந்ததாக கூறப்படுகிறது. சுற்றிலும் பச்சைபசேல் என வயல் வெளிகள் சூழ, மனதுக்கு அமைதி தரும் வகையிலான சுற்று சூழலோடு அமைந்திருக்கிறது.

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் அம்மன் ருத்ரகோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அக்னிகுண்டம் இறங்கல் சிறப்பாகும். இது 40 அடி நீளம் கொண்டது.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

அம்மன் சிரசில் ருத்ரன் உள்ளார். முடி ஜூவாலா முடி (நெருப்பு எரிந்து கொண்டிருப்பது போல் இருக்கும்) தாங்கி ருத்ரகாளியாக அமைந்துள்ளார். ருத்ரனின் முகம் அம்மனின் சிரசில் அமைக்கப்பட்டுள்ளது. குண்டம் இறங்குதல் : பக்தர்கள் மரக்கட்டைகளை கொண்டு வந்து மலை போல் குவித்து அவற்றை எரித்து 40 அடி நீளம் கொண்ட அக்னி குண்டமாக்கி விடுவார்கள். முதலில் தலைமை பூசாரி இறங்கி நடந்து செல்வார். பின்பு லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவார்கள். காலை 7 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் தொடர்ந்து அக்னி குண்டம் இறங்குவது மிகப்பெரிய பிரம்மாண்டமான மெய்சிலிர்க்கும் காட்சி ஆகும். ஆண், பெண், சிறுவர் சிறுமியர் உடல் ஊனமுற்றவர்கள் மெத்தையில் நடந்து வருவது போல் தீ கங்கில் அம்மனை நினைத்து 40 அடி நீளமுள்ள அக்னி குண்டத்தில் இறங்கி வருவது ஆச்சர்யமாக இருக்கும். குண்டமே அம்மனின் பெயரோடு சேர்ந்து கொண்டத்து (குண்டம்)காளியம்மன் என்று வழங்கப்படுகிறது. வாக்கு கேட்டல் : அம்மனின் வலது கையில் ராம் வாக்கு உள்ளது. இடது கையில் உத்தர வாக்கு உள்ளது. அம்பாளிடம் தங்கள் பிரச்சினைகளுக்கு உத்தரவு கேட்பவர்கள் வலது கை வாக்கு கிடைத்தால் காரியத்தை தொடர்கின்றனர். இடது கை வாக்கு கிடைத்தால் நிறுத்தி விடுகின்றனர். ஆனால் வியாதிகள் குணமாவதற்கு இடது கை உத்தரவே பெரிதும் வேண்டப்படுகிறது. முனியப்ப சுவாமி (குழந்தை பாக்கியம்) : இத்தலத்தில் பிரம்மாண்ட வடிவ

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: இத்தலத்தின் கொண்டத்துக்காரியை வணங்குவோர்க்கு திருமண பாக்கியம், குழந்தை வரம், விவசாய செழிப்பு ஆகியவற்றைத் தருவதோடு பில்லிசூன்யம், செய்வினை ஏவல் பகை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த துன்பங்களிலிருந்து பாதுகாத்து அருள்பாலிக்கிறார்.
🕯️ Vow / offering: அக்னி குண்டம் இறங்குதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், அம்மனுக்கு விளக்கு போடுதல் ஆகியவை முக்கிய நேர்த்திக்கடன்களாக இருக்கின்றன. லட்சார்ச்சனை, 1008 சங்காபிசேகம், பச்சை மா அலங்காரம், சந்தனக்காப்பு அலங்காரம் ஆகியவற்றைச் செய்யலாம். அம்மையை ஊஞ்சலில் அமரவைத்து பாடல்கள் இசைத்து ஊஞ்சல் ஆட்டலாம். இவை தவிர அம்மனுக்கு வழக்கமான அபிசேக ஆராதனைகள் நடத்தலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம். வசதியுள்ளவர்கள் திருப்பணிக்கு நன்கொடை தரலாம்.

🎉 Festivals

மார்கழி தேர்த்திருவிழா (குண்டம் இறங்குதல்) 5 நாள் திருவிழா 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வர். ஆடி வெள்ளி உற்சவம் 5 வெள்ளிக் கிழமைகளும் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக பக்தர்கள் கூடுவர். தவிர தை வெள்ளிக்கிழமைகள், மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். விசேச நாட்களான நவராத்திரி, கார்த்திகை தீபம், பொங்கல், தீபாவளி, தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு நாட்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடக்கும். அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது கண்கொள்ளாக்காட்சி.

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The temple is open from 6.00 a.m. to 11.00 a.m
4.00 p.m. to 8.00 p.m

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in Erode or Erode headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Erode to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஇணை ஆணையர், ஈரோடு

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.