🛕 Arulmigu Raamalinga Sowdeswari Amman Temple

அருள்மிகு ராமலிங்கசௌடேஸ்வரியம்மன் திருக்கோயில், Savakattupalayam, Gobichettipalayam - 638460
🔱 Raamalinga Sowdeswari Amman

📜 About this temple

ஆதிகாலத்தில் தேவர்கள், ரிஷிகள், மனிதர்கள் அனைவரும் ஆடையின்றி அவதிக்குள்ளாகினார்கள். எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஈசனிடம் சென்று முறையிட்டனர். அவர்களுக்கு அருள திருவுளம் கொண்ட சிவபெருமானும், தன் அங்கத்திலிருந்து ஜோதி பிரகாசத்துடன் தேவல முனிவரைத் தோற்றுவித்து, மகாவிஷ்ணுவின் உந்தித் தாமரை நூலை வாங்கி வந்து, இவர்களுக்கு ஆடை தயார் செய்து கொடு என்று பணித்தாராம். அதன்படியே தேவல முனிவர், மகாவிஷ்ணுவை தரிசித்து உந்தித் தாமரை நூல் பெற்றுத் திரும்பும் வழியில் அசுரர்கள் அவரைப் பிடித்து துன்புறுத்தினர். அவர் அம்பிகையைப் பிரார்த்தித்து அபயக்குரல் எழுப்பினார். அக்கணமே சிம்மவாகினியாகத் தோன்றிய அம்பிகை அசுரர்களை வதம் செய்தாளாம். அப்படிப் போரிடும் போது அசுரர்களின் ரத்தத் துளிகளில் இருந்து புதிது புதிதாக அசுரர்கள் சிந்தும் ரத்தத்தைப் பருகும்படி சிம்மத்துக்குக் கட்டளையிட்டாள் அம்பிகை. சிம்மமும் அப்படியே செய்தது. ஆனாலும் போரின் இறுதியில், சிம்ம வாகனத்தின் காது மடல்களில் இருந்த ரத்தத் துளிகள் அசுரகணம் நீங்கப் பெற்று மனிதர்களாக உருப்பெற்றன. அவர்களை தேவல முனிவருக்கு உதவியாக இருக்கும்படி ஆணையிட்டு சென்றாளாம் அம்பிகை. தேவல முனிவரும் உந்தித் தாமரை நூலினால் அனைவருக்கும் ஆடைகள் நெய்து கொடுத்தார். இவரின் வழிவந்தவர்களே, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனை வழிபடும் தேவாங்க சமூகத்தினர் (சிவபெருமானின் அங்கத்திலிருந்து உருவானவர்கள் தேவாங்கர்) எனவும், இவர்களின் நெசவுத் தொழிலுக்கு உதவியாக இருப்பவர்கள் சிங்குதாரர்கள் எனவும் இக்கோயிலின் தலவரலாறு சொல்கிறது.

தைப்பொங்கல் விழாவின் ஓர் அங்கமாக அன்று காலை கோயிலுக்கு மேற்கே இருக்கும் கிணற்றடிக்குச் சென்று அம்மனை அழைத்து வரும் வைபவம் நடைபெறும். அப்போது சக்தி, சாமுண்டி, ஜோதியம்மா.... எனும் முழக்கத்துடன் அம்மன் ஊர்வலம் நகர, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் வேண்டுதல் நிறைவேறிக் கொண்ட இளைஞர்கள் தங்கள் கைகளிலும் மார்பிலுமாக கத்தி போட்டபடி, நெசவாளர்கள் உருவான கதையை பாடலாக பாடியபடியே அம்மனை அழைத்து வருவார்கள்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).