📜 About this temple
இராம, இராவண யுத்தம் முடிந்த பின், இராவணனை வதம் செய்து தோஷம் தீர, ராமரும், சீதையும் சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய எண்ணி, ஆஞ்சநேயரிடம் சிவலிங்கத்தைக் கொண்டு வருமாறு கூறினர். ஆஞ்சநேயர் வர சற்று தாமதமானதால் சீதாதேவி மண்ணைப் பிடித்து சிவலிங்கமாக பிரதிஷ்டை செய்து விட்டார். ஆஞ்சநேயர் வந்து சேர்ந்து, தாம் கொணர்ந்த சிவலிங்கம் ஏற்கப் படாததை எண்ணி ஒரே ஒரு விநாடி சீதாதேவியிடம் கோபம் கொண்டாராம். மறுகணமே தன் தவறை உணர்ந்து, தாயைக் கோபித்துக் கொண்ட பெரும் பாவத்தை எங்கே போக்கிக் கொள்வேன் ? என்று கண்ணீர் வடித்து பல திருத்தலங்களுக்குச் சென்று பெருமாளை வழிபட்டார். இத்தலத்திற்கு வந்து இங்குள்ள திருக்குளத்தில் நீராடியவுடன் ஆதிகேசவப் பெருமாள் தரிசனம் தந்து ஆஞ்சநேயரை அனுக்கிரஹித்து அவரின் மன வருத்தத்தைப் போக்கினார். மேலும், கலியுகத்தில் தாயை கவனித்துக் கொள்ளாமல் கைவிடுபவர்கள், அவர்களை தூஷிப்பவர்கள், பொதுவாகப் பெண்களை நிந்திப்பவர்கள் ஆகியோர் ஏராளமாக இருப்பார்கள். அவர்களின் பாவத்திற்கு இங்குள்ள குளத்தில் நீராடி தங்களைத் தரிசித்து சரணடைவதால் பிராயச்சித்தம் ஏற்படட்டும் என்று ஆஞ்சநேயர் பெருமாளிடம் வரம் கேட்டுப் பெற்றதாக வரலாறு. மகாபாரதத்தில், கர்ணனே தன் மூத்த மகன் என்பதை குந்திதேவி சொல்லாமல் மறைத்து விட்டதால் தர்மபுத்திரர் கோபமுற்று, பெண்களிடன் இனி எந்த ரகசியங்களும் தங்காமல் இருக்கட்டும் என்று சாபமிட்டார். பெண்களை சபித்ததால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது. அத்தோஷம் விலக, தர்மபுத்திரர் தம் தாய் குந்திதேவியுடன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். இங்குள்ள குளத்தில் நீராடி பெருமாளை தரிசித்தவுடன் அவரின் தோஷங்கள் நீங்கியதாக வரலாறு.
கங்கை, யமுனை, சரஸ்வதி, சரயூ, கோதாவரி, நர்மதை, துங்கபத்தை, காவிரி ஆகிய எட்டு நதிகளும் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ள இவ்விடத்தில் தவமியற்றியதாகவும், மரகதவல்லி சமேதராக ஆதிகேசவப் பெருமாள் காட்சியளித்து அவர்களை அனுக்கிரஹித்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. பாவங்கள் நீங்கப்பெற்று மகிழ்ச்சியடைந்த எட்டு நதிகளும் பெருமானை தினமும் தரிசிக்க விரும்பி இங்கேயே தனித்தனியாக எட்டு கிணறுகளில் தங்கியிருக்கின்றனர் என்பது சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).