Arulmigu Dharmisvarar Thirukoyil

Arulmigu Dharmisvarar Thirukoyil

அருள்மிகு தர்மீஸ்வரர் திருக்கோயில், Manimangalam - 601301
🔱 Subramaniya Swamy

Manimangalam
Kanchipuram District, Tamil Nadu, India — 601301

📷 Photo Gallery

Arulmigu Dharmisvarar Thirukoyil photo 1Arulmigu Dharmisvarar Thirukoyil photo 2Arulmigu Dharmisvarar Thirukoyil photo 3Arulmigu Dharmisvarar Thirukoyil photo 4Arulmigu Dharmisvarar Thirukoyil photo 5Arulmigu Dharmisvarar Thirukoyil photo 6Arulmigu Dharmisvarar Thirukoyil photo 7Arulmigu Dharmisvarar Thirukoyil photo 8

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ OpensThe temple is open from 8.00 am to 10.00 am and from 5.00 pm to night 9’o clock.
📞 Phone+91- 44 - 2717 8157, 98400 24594
🎉 Festivalஆடிப்பூரம், நவராத்திரி, சிவராத்திரி
🙏 Prayer Intentionதர்மம் தழைக்கவும், நீதி கிடைக்கவும் சிவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். கல்வி, கலைகளில் சிறக்க அம்பிகை, சதுர்வேத விநயாகரை வழ
🕯️ Vow Ritualஇங்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவி
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சன்னதிக்கு எதிரேயுள்ள நந்தி சிலை, கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்

📍 Location

📍 Approximate location — Kanchipuram, Tamil Nadu. Help us add precise coordinates →

Manimangalam
Kanchipuram District, Tamil Nadu, India — 601301

📜 About this temple

முற்காலத்தில் இப்பகுதியை பல்லவ மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். சிவபக்தனான அம்மன்னன், தானதர்மங்கள் செய்வதில் சிறந்தவனாகத் திகழ்ந்தான். அவனுக்கு நீண்ட நாட்களாக, சிவாலயம் எழுப்பி வழிபட வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால், எவ்விடத்தில், எப்படி கோயில் அமைப்பது என அவனுக்குத் தெரியவில்லை. ஒருசமயம் சிவன், அடியார் வேடத்தில் அவனிடம் சென்றார். தான் பரம ஏழை என்றும், தனக்கு ஏதாவது தர்மம் செய்யும்படியும் வேண்டி நின்றார். மன்னன், அவருக்கு தானம் செய்ய முயன்றான். அப்போது அவர், ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு ஒரு சிவன் கோயில் கட்டி தானமாக தரும்படி கேட்டார். மன்னன் வியந்து நின்றான். அப்போது, அடியாராக வந்த சிவன் சுயரூபம் காட்டியருளினார். மகிழ்ந்த மன்னன், சிவன் குறிப்பிட்டுக் காட்டிய இடத்தில் கோயில் எழுப்பினான். சுவாமிக்கு, "தர்மேஸ்வரர்' என்றே பெயர் சூட்டினான்.

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சன்னதிக்கு எதிரேயுள்ள நந்தி சிலை, கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது தட்டும்போது வெண்கல ஓசை எழுகிறது.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் அமைந்த சன்னதியில் சிவன், சதுர வடிவ ஆவுடையாருடன் காட்சி தருகிறார். இவ்வகையான விமானங்கள், தரையிலிருந்து சன்னதியுடன் சேர்த்துதான் கட்டப்படும். ஆனால், இக்கோயிலில் சன்னதியின் மேல் பகுதி மட்டும் கஜபிருஷ்ட அமைப்பில் (யானையின் பின்பகுதி போன்ற அமைப்பு) கட்டப்பட்டிருப்பது வித்தியாசமான அமைப்பு. இங்கு சுவாமியிடம் வேண்டிக் கொள்ள, தர்மம் செய்யும் எண்ணம் உண்டாகும். அதர்மம் இழைக்கப்பட்டவர்கள் இவரை வழிபட, நீதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாத பவுர்ணமியன்று, இவருக்கு அன்னாபிஷேகம் செய்கின்றனர். மார்கழி திருவாதிரையன்று விசேஷ பூஜை செய்யப்படுகிறது. சிவராத்திரியன்று இரவில் 2008 தீபங்களை ஏற்றி வழிபடுகின்றனர். வேதங்களின் தலைவி: அம்பாள் வேதநாயகி தனிச்சன்னதியில், சதுர பீடத்தில் நின்றபடி இருக்கிறாள். இவள் வேதங்களின் இருப்பிடமாக இத்தலத்தில் அருளுகிறாள். எனவே இவள் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள். பவுர்ணமிதோறும் இவள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். புரட்டாசி மாத பவுர்ணமியன்று இவளது சன்னதியில் "நிறைமணிக்காட்சி' வைபவம் நடக்கும். அப்போது தானியங்கள், பழம், காய்கறிகள், மலர் போன்றவற்றை சன்னதி முன்மண்டபத்தில் கட்டி அலங்கரிக்கின்றனர். இந்த தரிசனம் கண்டால், பசி, பட்டினி இருக்காது என்பது நம்பிக்கை. ஆடிப்பூரம், நவராத்திரி, ஆடி, தை வெள்ளி, சித்ராபவுர்ணமி ஆகிய நாட்களில் விசேஷ பூஜ

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: தர்மம் தழைக்கவும், நீதி கிடைக்கவும் சிவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். கல்வி, கலைகளில் சிறக்க அம்பிகை, சதுர்வேத விநயாகரை வழிபடுகிறார்கள்
🕯️ Vow / offering: இங்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

🎉 Festivals

ஆடிப்பூரம், நவராத்திரி, சிவராத்திரி

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The temple is open from 8.00 am to 10.00 am
from 5.00 pm to night 9’o clock

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in Manimangalam or Kanchipuram headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Kanchipuram to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஉதவி ஆணையர், காஞ்சிபுரம்

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.