🛕 Arulmigu Ekambareswarar and Kanthappar Temple

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் கந்தப்பர் திருக்கோயில், தம்மனூர் - 631605
🔱 Ekambareswarar and Kanthappar

📜 About this temple

முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1073ல் எடுப்பித்து விளக்கு வைத்து சென்றுள்ளான். இக்கோயிலில் பலகல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் இரண்டாம் இராசராசனுடைய கல்வெட்டு தொன்மையானது, இங்குள்ள ஜேஷ்டா தேவியின் சிலை பல்லவர் காலத்தது. சம்புவரையனான ஆளப்பிறந்தான் வைகாசியில் விழா கொண்டாட, கைக்கோளரிடம் வரிவசூலித்தார். பங்குனியில் விழா எடுக்கவும் ஏற்பாடு செய்த செய்தி, அழகிய பல்லவன் கோன்நந்தி பன்மன் (கோப் பெருஞ்சிங்கன்) நன்மைக்காக, இக்கோயிலை கற்கோயிலாகக் கட்டித் திருமணமண்டபமும், இவ்வூரில் வாழ்ந்த வில்லி திருவன் திருகாந்தராய்ன் எழுப்பினார் கி.பி.1626ல் கிராம மக்கள் 5 காணி நிலப்பரப்பில் பூந்தோட்டமும் இலுப்பைத் தோப்பும் வைக்க ஏற்பாடு செய்தனர். 1760ல் பிரமீசம் பதிற்றுப் பத்தந்தாதி எழுதிய கச்சியப்பர், ஊரின் செழிப்பை பின் வருமாறு புகழ்ந்துள்ளார். மறைசூழ் பிரமநகர் (94) பலகாலும் ஏத்து விழவின் மிகுதிக்கண் நின்ற பிரமாபுரத்து தேவர் கூட்டங்கள் எவ்விடத்தும் நின்று பல முறையும் துதிக்கின்ற விழாக்கள் முகிதியிடத்து விளங்குகின்ற பிரமநகர் (27) பிரமநகர் பிரமீசன் தனையிறைஞ்சியேத்தினார்கள் காந்து மணி முடிஇமையோர்க்கு இறைவராய்ப் பேரின்பம் கலந்து வாழ்வார் (3) முடிஇமையோர்க்கு இறைவராய்ப் பேரின்பம் கலந்து வாழ்வார் (3) உமாதேவி என்றும் தவம் செய்திருக்கும் காஞ்சி தலத்தின் எல்லைக்கண் விளங்குகின்ற தேவர் குழாம் மகிழ்ச்சி மிகுந்து வணங்கும் சதுரானன சங்கரம் எனும் பெயரைப் பெற்றுள்ள பிரமநகர் (2)

சுயம்பு லிங்கம், மூலவர் சன்னதி கஜபிரதிஸ்டை பச்சை கருங்கல்லால் கட்டப்பட்டது. கோயிலின் உட்பிரகார ஈசான மூலையில் பச்சைக் கல்லில் ஆன மகாபைரவர் வாகனமின்றி தனித்தே காட்சியளிப்பது சிறப்பம்சமாகும். கோயிலின் மூன்றாவது திருச்சுற்றில் அட்ட நாகங்களான அனந்தன் வாசுகி, தட்சகன், கார்க்கோடன், சங்கன், பத்மன், மகாபத்மன், குளிகன் ஆகியோர் உள்ளனர். பச்சைக் கல்லாலான தூங்கானைமாடக் கோயிலான இக்கோயில் விமானத்தில் 3 கலசங்கள் கொண்டு அழகுடன் விளங்குகிறது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).