
Arulmigu Kailasanathar Thirukoyil
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், பாலார் நதி பாலம், வளத்தோட்டம் - 631502
🔱 Pasuveshwarar (Sripasuvannaswami)Private Temple
பாலார் நதி பாலம்
Kanchipuram District, Tamil Nadu, India — 631502
📋 Temple Details
⏰ OpensThe temple is open from 6.30 a.m. to 12.30 p.m. and from 4.00 p.m. to 7.30 p.m.
📞 Phone+91- 44- 2747 2235, 98403 64782
🎉 Festivalதிருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, பிரதோஷம். இது தவிர பவுர்ணமி நாட்களில் சிவன்,
🙏 Prayer Intentionதேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், தொழிலில் வெற்றியடைவும் இவரை வேண்டுகின்றனர். குடும்பத்தில் ஐஸ்வர்யம் கிடைக்க இங்கு வழிபட
🕯️ Vow Ritualதிருமணத்தடை உள்ள பெண்கள், அம்பாள் சன்னதிக்குள் சென்று, தங்கள் கையாலேயே தாலி அணிவிக்கும் வித்தியாசமான
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: திருமணத்தடை உள்ள பெண்கள், அம்பாள் சன்னதிக்குள் சென்று, தங்கள் கையாலேயே தால
📜 About this temple
இப்பகுதியில் வசித்த கடல் வணிகர்கள் பயணத்தின்போது பாதுகாப்பாக இருக்கவும், தொழில் சிறக்கவும் சிவபெருமானுக்கு ஒரு கோயில் எழுப்பினர். காலப்போக்கில் கடல் சீற்றத்தால் கோயில் மறைந்துவிட்டது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த சிவபக்தனான பல்லவ மன்னன், சிவனுக்கு கோயில் எழுப்பும் ஆயத்தப்பணிகளை துவங்கினான். அவனது கனவில் தோன்றிய சிவன், அழிந்து போன கோயிலின் லிங்கம் ஓரிடத்தில் மறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். மன்னன் லிங்கத்தைக் கண்டெடுத்து கோயில் எழுப்பி அங்கு பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு கைலாசநாதர் என பெயர் ஏற்பட்டது.
அதிசயத்தின் அடிப்படையில்: திருமணத்தடை உள்ள பெண்கள், அம்பாள் சன்னதிக்குள் சென்று, தங்கள் கையாலேயே தாலி அணிவிக்கும் வித்தியாசமான வழக்கம், இக்கோயிலில் உள்ளது. திருமணமாகாத ஆண்கள், சிவன் சன்னதி எதிரேயுள்ள நந்தீஸ்வரருக்கு தாலி அணிவித்து வேண்டிக்கொள்கின்றனர்.
Source: Dinamalar Temple Portal.
🔱 Temple Lore & Pilgrimage
✨ Sthala Greatness
லிங்கத்தில் கல்வெட்டு: வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்த கோயில் இது. லிங்கத்தின் ஆவுடையாரில் கோயில் குறித்த செய்திக் குறிப்பை கல்வெட்டாக பொறித்துள்ளனர். பவுர்ணமி நாட்களில் சிவன், அம்பிகைக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், பிதுர்தோஷ நிவர்த்திக்காக அமாவாசையன்று கடலில் நீராடி சுவாமியை வழிபடுகிறார்கள். புரட்டாசி மகாளய அமாவாசையன்று இந்த வழிபாட்டைச் செய்வது மேலும் சிறப்பு. மூன்று கணபதி தரிசனம்: பிரகாரத்தில் குபேர கணபதி வடக்கு (குபேரதிசை) நோக்கி காட்சியளிக்கிறார். மற்றொரு சன்னதியில் விஜய கணபதி இருக்கிறார். தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், தொழிலில் வெற்றியடைவும் இவரை வேண்டுகின்றனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் சிவசக்தி கணபதி இருக்கிறார். விநாயகர் சதுர்த்தியன்று மூவருக்கும் விசேஷ பூஜை நடக்கும். இந்நாளில் இவர்களை வழிபட்டு வர குடும்பத்தில் ஐஸ்வர்யம் கிடைக்கும். தாலி வழிபாடு: இத்தலத்து அம்பிகை பொன்னைப்போல மின்னுபவளாகவும், தம்மை வழிபடும் பக்தர்களுக்கு பொன் போன்ற வாழ்க்கையைத் தருபவளாகவும் அருளுவதால் கனகவல்லி (கனகம்- தங்கம்) என்ற பெயரில் அருளுகிறாள். திருமணமாகாத பெண்கள் மாங்கல்ய பாக்கியம் கிடைக்க இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த வழிபாட்டைச் செய்யும் பெண்கள் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை அணிவித்த பின்பு, அம்பாள் சன்னதிக்குள் சென்று, தாலி அணிவித்து
🛕 Pilgrimage Guide
🙏 Prayer intention: தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், தொழிலில் வெற்றியடைவும் இவரை வேண்டுகின்றனர். குடும்பத்தில் ஐஸ்வர்யம் கிடைக்க இங்கு வழிபடுகின்றனர்.
🕯️ Vow / offering: திருமணத்தடை உள்ள பெண்கள், அம்பாள் சன்னதிக்குள் சென்று, தங்கள் கையாலேயே தாலி அணிவிக்கும் வித்தியாசமான வழக்கம், இங்குள்ளது. முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், பிதுர்தோஷ நிவர்த்திக்காக அமாவாசையன்று கடலில் நீராடி சுவாமியை வழிபடுகிறார்கள்.
🎉 Festivals
திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, பிரதோஷம். இது தவிர பவுர்ணமி நாட்களில் சிவன், அம்பிகைக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும்.
Source: Dinamalar Temple Portal.
🕐 Opening Hours
⏰ The temple is open from 6.30 a.m. to 12.30 p.m
⏰ from 4.00 p.m. to 7.30 p.m
Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.
🚗 How to Reach
✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in பாலார் நதி பாலம் or Kanchipuram headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Kanchipuram to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.
Distances and timings vary — please confirm locally before visit.
🏛️ Authority & Grievance
Operatorஉதவி ஆணையர், காஞ்சிபுரம்
Listed contacts are public-office channels only. Grievance policy.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🤝 Improve This Page
📸 Missing a photo? Know updated pooja times? Found an error?
Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.