🛕 Arulmigu Viyagarapureswrar Temple

அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புலிவனம் - 603406
🔱 Viyagarapureswarar

📜 About this temple

சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதர் என்பவரும் வசித்தனர். இவர்கள் சிவனுக்கு தினமும் மலர் மாலை அணிவித்து வணங்குவது வழக்கம். ஆனால், பல சமயங்களில் நல்ல மலர்கள் கிடைக்காது. அழுகல் மலர்கள் கலந்து விடும். மரத்தின் உச்சியிலுள்ள நல்ல மலர்களை பறிக்க வியாக்ரபாதருக்கு முடியாத சூழல் இருந்தது. அவர் மன வருத்தத்தில் இருந்தார். பக்தனின் வருத்தம் போக்க சிவன் அவர் முன் தோன்றினார்.""பக்தனே! உன் வருத்தத்தின் காரணத்தைச் சொல்,'' என்றார் தெரியாதவர் போல. வியாக்ரபாதர் சிவனிடம், ""தங்களுக்கு பூஜை செய்ய சிறந்த மலர்கள் கிடைப்பதில்லை. அதிகாலையில் நடை திறக்கும் முன் மாலை தொடுத்தாக வேண்டும். இருளில் நல்ல மலர்கள் தெரிவதில்லை. அதற்குரிய வசதியைச் செய்து தர வேண்டும்,'' என்றார். சிவன் அவருக்கு புலிக்கால்களைக் கொடுத்தார். அந்த நகங்களால் மரத்தை இறுகப் பற்றிக் கொண்டு ஏறி சிறந்த மலர்களைப் பறித்து வழிபட்டார் வியாக்ரபாதர். இவர் புலிவடிவில் தரிசித்த தலமே திருப்புலிவனம். சுவாமியும் தன் பக்தனின் பெயரையே தனக்கும் சூட்டிக் கொண்டு "வியாக்ரபுரீஸ்வரர்' ஆனார்.

இங்கு சிவபெருமான் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தின்மீது புலியின் பாதங்கள் படிந்துள்ளன. சிவனின் விலா எலும்பும் தெரிகிறது. லிங்கத்தின் மேல்பாகத்தில் ஜடாமுடி உள்ளது. உத்ராயணம், தட்சிணாயணம் இரண்டு புண்ணிய காலங்களிலும் இங்குள்ள சூரியன் சிலையின் நிழல், சாயாமல் நேராகவே சுவரில் விழுவது ஒரு தெய்வீக அதிசயம். தெட்சிணாமூர்த்தி ஒரு காலை சிங்க வாகனத்தில் வைத்துள்ளார். மற்றொரு கால் வழக்கம் போல் முயலகன் மீது இருக்கிறது. இந்த அமைப்பை வேறு எங்கும் காண இயலாது. இவரை "ராஜயோக சிம்ம தெட்சிணாமூர்த்தி' என்கின்றனர். இவரை "அர்த்தநாரீஸ்வர தெட்சிணாமூர்த்தி' என்றும் சொல்வர். காரணம், அம்பாளுக்கு உகந்த சிம்மத்தின் மீதும், மறுகால் நடராஜப் பெருமானின் காலடியில் உள்ள முயலகன் மீதும் உள்ளதாலும் ஆகும். ஒருபுறம் ஆண்மையின் மிடுக்கும், மறுபுறம் பெண்மையின் நளினமும் இச்சிலையில் தெரிகிறது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).