🛕 Arulmigu Nagareswarar Temple

அருள்மிகு நகரேஸ்வரர் திருக்கோயில், சுபாஷ் சந்திரபோஸ் தெரு, காவேரிப்பட்டிணம் - 635112
🔱 Nagareswarar

📜 About this temple

விருத்தாசூரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பெரும் துன்பத்தை விளைவித்து வந்தான். இதனால் வருத்தமுற்ற தேவர்கள் தேவர்களின் தலைவனான இந்திரனிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட இந்திரன் தனது ஆஸ்தான வாகனமான ஐராவதத்துடன் சென்று விருத்தாசூரனுடன் போரிட்டு அவனை அழித்தான். இதனால் இந்திரனுக்கும் அவனது யானை ஐராவதத்திற்கும் பிரம்மஹத்தி தோஷம் தொற்றிக்கொண்டது. பிரம்மஹத்தி தோஷம் நீங்க அகஸ்திய நதிக்கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டுமென அசரீரி கூறியது. இதையடுத்து இந்திரனும் ஐராவதமும் அகஸ்திய நதி ஓடும் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றனர். ஹஸ்தி என்றால் யானை. யானை இங்கு வந்து வழிபட்டதால் இத்தலத்திற்கு "ஹஸ்திமுகம்' என பெயர் வந்தது. இதுவே காலப்போக்கில் மருவி "அத்திமுகம்' என அழைக்கப்படுகிறது.

ஒரே கோயிலில் இரண்டு மூலர்வர்கள் உள்ளனர். சூரிய பூஜைக்காக நந்தி விலகியிருக்கும் தலம் இது. தைமாதம் முதல் வாரத்தில் சூரியனின் கதிர்கள் இறைவனின் மீது விழுகிறது. ஐராவத யானை இங்கு வழிபட்டதால் ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).