Arulmigu Sakthi Vinayagar Thirukoyil

Arulmigu Sakthi Vinayagar Thirukoyil

அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயில், புளிஞ்சேரி, புளிஞ்சேரி - 635115
🔱 PasuvannaswamyPrivate Temple

புளிஞ்சேரி
Krishnagiri District, Tamil Nadu, India — 635115

📋 Temple Details

⏰ OpensThe temple is open from 7.00 a.m. to 11.00 a.m. and 4.00 p.m. to 8.00 p.m.
📞 Phone+91- 94436 18811
🎉 Festivalசித்திரை மூல நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம், விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி
🙏 Prayer Intentionஇங்கு எந்த கிரகத்தின் தோஷமாக இருந்தாலும் தோஷ நிவர்த்தி பூஜை செய்யலாம்.
🕯️ Vow Ritualகடன் சுமை அதிகமாக உள்ளவர்கள் ஒரு சுக்லபக்ஷ சதுர்த்தியன்று தேங்காய் எண்ணெயில் 12 விளக்கேற்றி பின் ஒவ்
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: சக்தியின் அம்சமான விநாயகர் இங்கு சிவனின் ஆவுடை மீது வலது கையில் ஒடிந்த தந்

📍 Location

📍 Approximate location — Krishnagiri, Tamil Nadu. Help us add precise coordinates →

புளிஞ்சேரி
Krishnagiri District, Tamil Nadu, India — 635115

📜 About this temple

சக்தியின் அம்சமான விநாயகர் இங்கு சிவனின் ஆவுடை மீது வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடது கையில் கொழுக்கட்டையுடனும் ஈசனின் திசையான ஈசான்யத்தை (வடகிழக்கு) நோக்கி அருள்பாலிக்கிறார். தனது பாதத்தில் சரணடைந்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும் என்பதற்கேற்ப இடது பாதத்தை காட்டுகிறார். இந்த விநாயகரை வழிபட்டால் சிவசக்தியை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோயில் பிற கோயில்களைப்போல் அல்லாமல் இரண்டு அடுக்குமாடியுடன் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.

அதிசயத்தின் அடிப்படையில்: சக்தியின் அம்சமான விநாயகர் இங்கு சிவனின் ஆவுடை மீது வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடது கையில் கொழுக்கட்டையுடனும் ஈசனின் திசையான ஈசான்யத்தை (வடகிழக்கு) நோக்கி அருள்பாலிக்கிறார். நவக்கிரகங்கள் அனைத்தும் தத்தம் தேவியருடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார்கள்.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

கருவறையில் விமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் முன்புறம் சுவாமி, அம்மன், பிள்ளையார், நாரதர், சுப்ரமணியர், மற்றும் ரிஷபத்துடன் கூடிய கைலாய காட்சி காண்பவரை மெய் சிலிர்க்க வைக்கும். கோயிலின் கீழ்தளத்தில் யாகசாலையும், தியானமண்டபமும் அமைந்துள்ளது. மேல்தளத்திற்கு செல்ல இருபுறமும் படிக்கட்டுகள் அமைந்துள்ளது. பிள்ளையாரின் தரிசனத்தால் நம் வாழ்க்கையின் தரம் படிப்படியாக ஏறுவது போல், படிகளின் மீது ஏறி பார்த்தால் அங்கு முழுமுதற்கடவுள் நமக்கு அருள்பாலிக்க தயாராக இருப்பது போல் வீற்றிருக்கிறார்.இவருக்கு இருபுறமும் கற்பக விநாயகரும், மாணிக்க விநாயகரும் உள்ளனர். சித்தி விநாயகருக்கு எதிரில் அவரது வாகனமும் பலி பீடமும் அமைந்துள்ளது. விநாயகரின் வலதுபுறத்தில் தாய் சொர்ணாம்பிகையும் அவளது இருபுறமும் மீனாட்சி, விசாலாட்சியும் அருள்பாலிக்கிறார்கள். முருகன், அம்மன் கோயில்களுக்கே உரித்தான பால்குட வழிபாடு இங்கு விசேஷம். விநாயகர் சதுர்த்தியன்று பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் எடுக்கின்றனர்.

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: இங்கு எந்த கிரகத்தின் தோஷமாக இருந்தாலும் தோஷ நிவர்த்தி பூஜை செய்யலாம்.
🕯️ Vow / offering: கடன் சுமை அதிகமாக உள்ளவர்கள் ஒரு சுக்லபக்ஷ சதுர்த்தியன்று தேங்காய் எண்ணெயில் 12 விளக்கேற்றி பின் ஒவ்வொரு சதுர்த்தியிலும் ஒவ்வொரு விளக்காக குறைத்து தீபமேற்றும் பழக்கம் உள்ளது. விளக்கின் எண்ணிக்கை குறைவது போல பக்தர்களின் கடன் சுமை குறைகிறது என்று நம்புகிறார்கள். எனவே இவரை "கடன் தீர்க்கும் கணபதி' என்றும் செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.

🎉 Festivals

சித்திரை மூல நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம், விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, தீபாவளி, மார்கழி பள்ளியெழுச்சி, தை பொங்கல், தை அமாவாசை. அம்மனுக்கு பவுர்ணமி பூஜை, நவராத்திரி பூஜை, முருகனுக்கு மாதகார்த்திகை, சஷ்டி, தைப்பூச பூஜை.

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The temple is open from 7.00 a.m. to 11.00 a.m
4.00 p.m. to 8.00 p.m

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in புளிஞ்சேரி or Krishnagiri headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Krishnagiri to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஉதவி ஆணையர்,கிருஷ்ணகிரி

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.