📜 About this temple
முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. அசுரர்களில் நிறைய பேர் மாண்டனர். மாண்டு போன அசுரர்களை எல்லாம் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் மருதசஞ் சீவினி என்ற மந்திரம் மூலம் உயிர் பெறச்செய்து காப்பாற்றி வந்தார். அந்த மந்திரத்தை கற்றுக்கொள்ள விரும்பிய தேவர்கள், வியாழ பகவானின் (குரு) மகன் கசனை அழைத்து, ""உனது தியாகத்தால் தான் அசுரர்களை வெல்ல முடியும். எனவே நீ அசுர குரு சுக்கிராச்சாரியாரிடம் சென்று குருகுல வாசம் செய்து மருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் பெற்று வர வேண்டும்'' என்றார்கள். தேவர்கள் கூறியதுபோலவே கசனும் தன் தந்தை வியாழபகவானிடம், ""நான் திரும்பி வரும் போது பிரம்மச்சாரியாகத்தான் வருவேன்,'' என்று சபதம் செய்து விட்டு, அவரது ஆசியுடன் அசுரகுருவிடம் சென்றான். அசுரலோகம் சென்ற அவன், சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவள் மூலமாக சுக்ராச்சாரியாரிடம் மந்திரம் கற்றுக் கொண்டான். இதையெல்லாம் கண்காணித்து வந்த அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்கு ஆபத்து வந்துவிடும் என நினைத்து கசனை கொன்று விட தீர்மானித்தார்கள். அதன்படி கசனை கொன்று தீயிலிட்டு சாம்பலாக்கி அசுரகுரு குடிக்கும் பானத்தில் கலக்கி கொடுத்து விட்டார்கள். அசுரகுருவும் ஏதும் அறியாமல் குடித்து விட்டார். கசனை காணாத தேவயாணி, தன் தந்தை சுக்கிராச்சாரியாரிடம் கசனின் இருப்பிடத்தை கண்டறியும் படி வேண்டினாள். அசுரகுருவும் தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து தன் மகளை தேற்றினார். தேவயாணியின் விருப்பப்படி மருதசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர் பெறச் செய்தார். உயிர்பெற்று வந்த கசன், தன் உயிரைக்காப்பாற்றிய அசுரகுரு இறந்து கிடப்பதைக் கண்டு தான் அவரிடம் கற்ற மந்திரம் மூலம் அசுரகுருவை உயிர்பெறச் செய்தான். அசுரகுரு உயிர் பெற்றவுடன், ""குருவே நான் வந்த காரியம் முடிந்து விட்டது எனக்கு விடை தாருங்கள். நான் செல்ல வேண்டும்,'' என்று கூறினான். சுக்கிராச்சாரியார் தன் மகள் தேவயாணியை மணம் முடித்து செல்ல வேண்டும் என்று கூற, அதற்கு கசன் தன் தந்தையிடம் பிரம்மசாரியாக திரும்பி வருவதாக சத்தியம் செய்திருப்பதாகவும், மேலும் சுக்கிராச்சாரியாரின் வயிற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதால் தேவயாணி எனக்கு சகோதரி முறை வேண்டும் என பக்குவமாகக் கூறி தேவலோகம் கிளம்ப
இங்கு குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். இங்கு பெருமாள் தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். இத்தலத்தில் நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).