
Arulmigu Manighandheshvarar Thirukoyil
அருள்மிகு மணிகண்டேஷ்வரர் திருக்கோயில், கீழமாத்தூர் - 625016
🔱 AyyanarPrivate Temple
கீழமாத்தூர்
Madurai District, Tamil Nadu, India — 625016
📋 Temple Details
⏰ OpensThe temple is open from 8.30 a.m. to 11.30 a.m. and 4.30 p.m. to 7.00 p.m.
📞 Phoneபொது தகவல்:
🎉 Festivalசிவராத்திரி, திருக்கார்த்திகை.
🙏 Prayer Intentionஇங்கு வேண்டிக்கொள்ள மனக்குழப்பங்கள் நீங்கி, அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
🕯️ Vow Ritualசுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்தலாம்.
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: அகத்தியர் பாறையில் சுனை நீரை தெளித்து, பாறை நெகிழ்வாக மாறியது. பின், பாறைய
📜 About this temple
கைலாயத்தில் சிவ,பார்வதி திருமணம் நடந்தபோது, தேவர்களும், மகரிஷிகளும் அங்கு சென்றனர். இதனால், வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. எனவே, சிவன் அகத்தியரை தெற்கே பொதிகை மலை நோக்கி அனுப்பினார். தென்திசைக்கு கிளம்பிய அகத்தியர் தான் மட்டும் சிவன் திருமணத்தை காணாமல் செல்வதை எண்ணி வருந்தினார். எனவே சிவன், அகத்தியர் செல்லும் வழியில் எவ்விடத்தில் திருமணக்காட்சி காண விரும்புகிறாரோ, அவ்விடங்களில் தான் மணக்கோலத்தில் காட்சி தரும்படியான வரம் கொடுத்தார். அதன்படி தென்திசை வந்த அகத்தியர் பல தலங்களில் சிவனின் திருமணக்காட்சியை தரிசித்தார். அவர் இத்தலம் வழியாக வந்தபோது, இந்த குன்றில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது அவர் சிவதிருமண தரிசனம் பெற வேண்டும் என எண்ணினார். சிவனை தரிசிக்கும் முன்பு நீராட விரும்பினார். அந்த நேரத்திலேயே, அதிசயமாக பாறையில் ஊற்று பெருகியது. தீர்த்தத்தில் நீராடிய அகத்தியர், சிவனை வழிபட அருகில் லிங்கம் தேடினார். ஆனால், லிங்கம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, பாறையில் சுனை நீரை தெளித்தார். தீர்த்தம் தெளித்ததும், பாறை நெகிழ்வாக மாறியது. பின், பாறையையே சிவலிங்கமாக பிடித்து பூஜைகள் செய்து வழிபட்டார் அகத்தியர். அப்போது இக்குன்றுக்கு எதிரேயுள்ள மற்றொரு மலையில் சிவன், பார்வதியுடன் திருமணக் கோலத்தில் காட்சியளித்தார். அகத்தியருக்கு காட்சி தந்தவர் என்பதால் சுவாமி, "அகத்தீஸ்வரர்' எனவும் பெயர் பெற்றார்.
அதிசயத்தின் அடிப்படையில்: அகத்தியர் பாறையில் சுனை நீரை தெளித்து, பாறை நெகிழ்வாக மாறியது. பின், பாறையையே சிவலிங்கமாக பிடித்து பூஜைகள் செய்து வழிபட்டார்.
Source: Dinamalar Temple Portal.
🔱 Temple Lore & Pilgrimage
✨ Sthala Greatness
சிவன் சன்னதிக்கு பின்புறத்தில் சுனை தீர்த்தம் இருக்கிறது. மிகவும் விசேஷமான இந்த தீர்த்தம் எப்போதும் வற்றுவதில்லை என்பது கலியுக அதிசயம். சுனை தீர்த்தம் தெளித்து சிவலிங்கம் உண்டாக்கப்பட்டதால் இத்தலம் தீர்த்தத்தின் பெயராலேயே, "திருச்சுனை' என்று அழைக்கப்படுகிறது. அகத்தியர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். பொதுவாக கோயில்களில் நுழைவு வாசலின் வலப்புறத்தில் சூரியன் தனியாகத்தான் இருப்பார். அரிதாக சில தலங்களில் நவக்கிரக மண்டபத்தில் மனைவியருடன் இருப்பார். ஆனால், இங்கு நுழைவு வாசல் அருகில் உஷாவுடன் சேர்ந்து காட்சியளிக்கிறார். உடன் பிரத்யூஷா இல்லை. இந்த அமைப்பை காண்பது அபூர்வம். சிவன், திருமணக்காட்சி தந்த தலமென்பதால் இக்கோயிலில் அதிகளவில் திருமணங்கள் நடத்தப்படுகிறது.
🛕 Pilgrimage Guide
🙏 Prayer intention: இங்கு வேண்டிக்கொள்ள மனக்குழப்பங்கள் நீங்கி, அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
🕯️ Vow / offering: சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்தலாம்.
🎉 Festivals
சிவராத்திரி, திருக்கார்த்திகை.
Source: Dinamalar Temple Portal.
🕐 Opening Hours
⏰ The temple is open from 8.30 a.m. to 11.30 a.m
⏰ 4.30 p.m. to 7.00 p.m
Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.
🚗 How to Reach
✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in கீழமாத்தூர் or Madurai headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Madurai to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.
Distances and timings vary — please confirm locally before visit.
🏛️ Authority & Grievance
Operatorஇணை ஆணையர், மதுரை
Listed contacts are public-office channels only. Grievance policy.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🤝 Improve This Page
📸 Missing a photo? Know updated pooja times? Found an error?
Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.