
Arulmigu Mariamman Thirukoyil
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கே.புதூர் - 625007
🔱 Thannierpanthal Dharmam
கே.புதூர்
Madurai District, Tamil Nadu, India — 625007
📋 Temple Details
⏰ OpensThe temple is open from 6.00 a.m. to 9.00 p.m. continuously.
📞 Phone+91-452 - 2311 475.
🎉 Festivalதைப்பூசத்தன்று தெப்பத்திருவிழாவும், பங்குனி மாதத்தில் பத்து நாள் பிரமோற்சவத்திரு
🙏 Prayer Intentionஅம்மை நோய், தோல் நோய்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து நோய்கள், தீராத வியாதிகள், மற்றும் நாள்பட்ட நோய்கள் தீர இங்கு வ
🕯️ Vow Ritualவேண்டிக்கொண்ட காரியங்கள் நிறைவேறிட, அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம் மற்றும் மாவிளக்குகள் எடுத்து, சி
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: மதுரையின் காவல் தெய்வமாக அம்பிகை வீற்றிருக்கும் இக்கோயிலில் அம்பாள் மிகுந்
📜 About this temple
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகரினை மன்னன் கூண்பாண்டியன் ஆட்சி புரிந்து வந்தார். அப்போது மதுரையின் கிழக்கே, தற்போது கோயில் வீற்றிருக்கும் பகுதி மகிழ மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அக்காட்டினை குறும்பர் எனும் இனத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியையே அழித்து வந்தனர். நாளுக்கு நாள் அவர்களின் தொந்தரவு கூடுதலாகவே, ஓர் நாள் இப்பகுதிக்கு வந்த மன்னர் அவர்களின் கொட்டத்தினை அடக்கி விரட்டியடித்தார். அவர்களை விரட்டியபின் தனது வெற்றியினை ஆண்டவனுக்கு சமர்ப்பித்து வணங்கிட, அருகே வைகையில் கிடைத்த அம்பாளை தெற்கு கரையில் தற்போது கோயில் வீற்றுள்ள பகுதியில் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
அதிசயத்தின் அடிப்படையில்: மதுரையின் காவல் தெய்வமாக அம்பிகை வீற்றிருக்கும் இக்கோயிலில் அம்பாள் மிகுந்த வரப்பிரசாதியாக அருளுகிறாள். இவளே ஆதிதெய்வமாகவும் வழிபடப்படுகிறாள். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த விசேஷங்கள் நடத்தினாலும், முதலில் இவளிடம் உத்தரவு கேட்டுவிட்டு அதன்பின்பே நடத்துகிறார்கள்.
மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் விழா நடக்கும் முன்பு முதல் பூஜை இவளுக்கே செய்யப்படுகிறது. கோயிலுடன் சேர்ந்துள்ள இத்தெப்பம் மதுரை வட்டாரத்திலேயே மிகப்பெரிய தெப்பம் எனும் பெருமையினை உடையது. பிற அம்மன் கோயில்களில் இல்லாத விதமாக இங்கு அம்மன் வலக்காலை இடக்காலின் மீது மடக்கிய நிலையில் எருமை தலையுடன் உட்கார்ந்த நிலையிலும், உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும் அருள்பாலிக்கிறாள்.
Source: Dinamalar Temple Portal.
🔱 Temple Lore & Pilgrimage
✨ Sthala Greatness
இரு அம்பிகை தரிசனம்: ஜமதக்னி மகரிஷியின் மனைவி ரேணுகாதேவி. ஒருசமயம் தண்ணீர் எடுக்கச்சென்றபோது, அவ்வழியே சென்ற கந்தர்வனின் அழகை நீரில் கண்டு ஆச்சர்யமடைந்தாள். எனவே ஜமதக்னி, அவளது பத்தினித் தன்மைக்கு களங்கம் ஏற்பட்டதாக சொல்லி, தன் மகன் பரசுராமனால் அவளது தலையை வெட்டினார். அதன்பின் பரசுராமர், தன் சாமர்த்தியத்தால் தாயை உயிர்ப்பித்தார். இவளே "மாரியம்மனாக' வணங்கப்படுகிறாள். அகிலத்தை ஆளும் பராசக்தி, தனது ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக எடுத்த அவதாரமே துர்க்கை. யட்ச குலத்தில் அவதரித்த மகிஷாசுரன் எனும் அசுரனை அழிப்பதற்காக பராசக்தி, தன் சக்தியிலிருந்து ஒரு மாயசக்தியை தோற்றுவித்தாள். அந்த சக்திக்கு சிவன் சக்தி கொடுக்க அதுவே முகமாகவும், பிரம்மாவின் சக்தி உடலாகவும், திருமால் கொடுத்த சக்தி பதினெட்டு கரங்களாகவும், எமதர்மனின் சக்தி கூந்தல், அக்னி பகவானின் சக்தி கண், மன்மதனின் சக்தி புருவம், குபேரனின் சக்தி மூக்கு, முருகனின் சக்தி உதடு, சந்திரனின் சக்தி தனங்கள், இந்திரனின் சக்தி இடை, வருணனின் சக்தி கால் என அனைத்து சக்திகளும் இணைந்த அம்பிகையாக துர்க்கை உருவெடுத்தாள். மகிஷாசுரனுடன் போரிட்டு வென்றதால் இவள் "மகிஷாசுரமர்த்தினி' என்று பெயர் பெற்றாள். மாரியம்மனும், துர்க்கையும் வேறுவேறு வடிவங்களாக இருந்தபோதிலும், இருவரும் அம்பிகையின் அம்சமாகவே திகழ்கின்றனர். இதனை உணர்த்தும்விதமாக இக்கோயிலில் இவ்விருவரும் சேர்ந்
🛕 Pilgrimage Guide
🙏 Prayer intention: அம்மை நோய், தோல் நோய்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து நோய்கள், தீராத வியாதிகள், மற்றும் நாள்பட்ட நோய்கள் தீர இங்கு வேண்டிக்கொள்ளப்படுகிறது. மேலும், இத்தலத்தில் வீற்றுள்ள அம்மனை வணங்கிட சகல சவுபாக்கியங்களும் பெருகி, குடும்ப பிரச்னைகளும், தொழில் பிரச்னைகளும் தீரும். பயம், திருமணத்தடை நீங்கி, குழந்தைப்பேறு கிட்டும் என நம்பப்படுகிறது.
🕯️ Vow / offering: வேண்டிக்கொண்ட காரியங்கள் நிறைவேறிட, அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம் மற்றும் மாவிளக்குகள் எடுத்து, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.
குழந்தைகளின் நோய்கள் தீர, குழந்தை தத்துக்கொடுத்து வாங்கி, மண்சிலைகள் கொடுத்து, கரும்புத்தொட்டில்கள் கட்டப்படும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
மேலும் கிடா வெட்டிப்படைத்தல், அங்கப்பிரதட்சிணம் செய்தல், முடி இறக்குதல், அலகு குத்துதல், உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்துதல் என பக்தர்கள் தத்தம் நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.
🎉 Festivals
தைப்பூசத்தன்று தெப்பத்திருவிழாவும், பங்குனி மாதத்தில் பத்து நாள் பிரமோற்சவத்திருநாளும், பூச்சொரிதல் திருவிழாவும், இக்கோயிலின் முக்கியத்திருவிழாக்களாக உள்ளது.
தெப்பத்திருவிழாவின் போது மீனாட்சியம்மன் இங்குள்ள தெப்பத்தின் நடுவே உள்ள வசந்த மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.
Source: Dinamalar Temple Portal.
🕐 Opening Hours
⏰ The temple is open from 6.00 a.m. to 9.00 p.m. continuously
Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.
🚗 How to Reach
✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in கே.புதூர் or Madurai headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Madurai to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.
Distances and timings vary — please confirm locally before visit.
🏛️ Authority & Grievance
Operatorஉதவி ஆணையர், மதுரை
Listed contacts are public-office channels only. Grievance policy.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🤝 Improve This Page
📸 Missing a photo? Know updated pooja times? Found an error?
Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.