📜 About this temple
பல்லாண்டுகளுக்கு முன்பு, சோழவந்தான் அருகிலுள்ள தேனூரில் தான் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா நடந்தது. அக்காலகட்டங்களில் பெருமாளுக்குரிய உற்சவ மண்டபங்கள் நெற்கதிர் கால்களைக்கொண்டு அமைக்கப்படும். ஒரு முறை கள்ளழகர் இந்த மண்டபத்தில் எழுந்தருளியபோது திடீரென தீப்பிடித்து விட்டது. அங்கிருந்த அரசர் உள்ளிட்ட அனைவரும் தள்ளி நின்றனர்.ஆனால், அமுதார் என்ற அர்ச்சகர், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தீயில் சூழ்ந்த கள்ளழகர் சிலையைத் தூக்கி, ஆற்று மணலில் போட்டுவிட்டு மயங்கி விழுந்தார்.இதைக்கண்ட அரசன், ""அமுதாரே! நான் ஆண்டாண்டு காலமாக கள்ளழகரின் தீவிர பக்தனாக உள்ளேன். அத்துடன் இவ்விழாவில் முதல் மரியாதையும் எனக்கு கிடைக்கிறது. அப்படியிருந்தும் கூட அழகரை காப்பாற்றாமல் என் உயிரையே பெரிதெனக் கருதி ஒதுங்கி நின்றேன்.நீங்களோ உயிரையும் பொருட்படுத்தாமல் பெருமாளை காப்பாற்றி விட்டீர்கள். எனவே இவ்வாண்டு முதல் எனக்குத் தரப்பட்ட முதல் மரியாதையை தாங்களே பெற வேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.அதற்கு அமுதார்,""அரசே! நான் மிகச் சாதாரணமானவன். முதல் மரியாதையைப்பெறும் தகுதி எனக்கு இல்லை. நான் அர்ச்சகராக சேவை செய்யும் வீரராகவப்பெருமாளுக்கு, கள்ளழகரின் முதல் மரியாதை கிடைக்குமாறு செய்யுங்கள்,''என வேண்டினார். அவரது விருப்பப்படியே கள்ளழகர் வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் போது, மதுரை வீரராகவப்பெருமாளுக்கு முதல் மரியாதை தரப்பட்டது.பின்னர் மதுரை வைகை ஆற்றின் வடகரைக்கு இவ்விழா மாற்றப்பட்ட பிறகும் இந்த மரியாதை தொடர்கிறது.
மதுரை வைகை ஆற்றில் சித்ராபவுர்ணமியன்று இறங்கும் கள்ளழகர் தரும் முதல் மரியாதையை பெரும் பெருமாள் இவர். பெருமாள் இத்தலத்தில் நின்ற கோலத்தில் வீரராகவப்பெருமாளாகவும், கிடந்த கோலத்தில் ரங்கநாதராகவும், அமர்ந்த கோலத்தில் யோக நரசிம்மராகவும் மூன்று நிலைகளில் அருளுகிறார்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).