
Arulmigu Jhubhramaniya Swamy Thirukoyil
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், Thirumarugal - 609702
Private TempleThiruppugazh
Thirumarugal
Nagapattinam District, Tamil Nadu, India — 609702
📋 Temple Details
⏰ Opens+91- 4364 -253 202, 94866 31196
📞 Phone+91- 4364 -253 202, 94866 31196
🎉 Festivalபங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, ஆருத்ர
🙏 Prayer Intentionதிருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்து பலன
🕯️ Vow Ritualமுருகனுக்கு சண்முக அர்ச்சனை செய்தும், காவடி எடுத்தும், பால் அபிஷேகம் செய்தும், சந்தனத்தால் அலங்காரம்
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: பெரும்பாலான முருகன் கோயில்களில் மயிலின் தலை வலது பக்கம் திரும்பியிருக்கும்
📜 About this temple
தட்சனின் மகளாக தாட்சாயணி என்னும் பெயரில் பார்வதிதேவி பிறந்து சிவனை மணந்தாள். ஒரு சமயம் தட்சன், சிவனை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினான். இதில் பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் கலந்து கொண்டார். இதனால் அவருக்கு சாபம் ஏற்பட்டது. பிரம்மா சிவனிடம் சாப விமோசனம் வேண்டினார். மன மிரங்கிய சிவன் பூலோகத்தில் தீர்த்தம் உண்டாக்கி என்னை வழிபட்டால் சாபம் நீங்கும் என்றார். அதன்படி வழுவூர் என்னுமிடத்தில் வீரட்டேஸ்வரர் என்னும பெயரில் சிவலிங்கம் எழுப்பி வழிபட்டு பிரம்மா சாபம் நீங்கப்பெற்றார். அத்துடன் இத்தலத்தின் அருகில் உள்ள பிரம்ம மங்களபுரத்தில் (பெரம்பூர்) தந்தைக்கு உபதேசம் செய்த சுப்பிரமணியரை வணங்கி ஞான உபதேசமும் பெற்றார். தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்திய சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். அவனது உடலின் ஒரு பகுதி மயிலாக மாற்றப்பட்டது. அது இத்தலத்திற்கு வந்து ஞான உபதேசம் பெற்றது.
அதிசயத்தின் அடிப்படையில்: பெரும்பாலான முருகன் கோயில்களில் மயிலின் தலை வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால் இங்குள்ள மூலஸ்தானத்தில் முருகனின் வாகனமான மயிலின் தலைப்பகுதி இடது பக்கம் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.
Source: Dinamalar Temple Portal.
🔱 Temple Lore & Pilgrimage
✨ Sthala Greatness
ஞானகுரு : தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்த சூரபத்மனை முருகப்பெருமான் அழித்தார். மயிலாகவும், சேவலாகவும் மாறிய சூரபத்மன் முருகனின் ஞான உபதேசம் பெற விரும்பினான். பிரம்மனுக்கும், மயிலுக்கும் முருகன் ஞான உபதேசம் செய்ததால், இத்தல முருகன் ஞான குருவாக விளங்குகிறார். பெரும்பாலான முருகன் கோயில்களில் மயிலின் தலை வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால் இங்கு முருகனின் இடது பக்கம் திரும்பியிருப்பது சிறப்பம்சமாகும். ஆறுமுகன் :மூலஸ்தானத்தில் முருகப்பெருமான் ஆறுமுகம், 12 திருக்கரங்களுடன், மயில் மீது அமர்ந்தபடி, வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். இங்கு முருகப்பெருமான் ஞான குருவாக விளங்குகிறார். எனவே குக தட்சிணாமூர்த்தி, குக சண்டிகேஸ்வரர் அருளுகின்றனர். அப்பர் தேவாரத்தில் இத்தலம் தேவார வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. தை ஞாயிற்றுக் கிழமைகளில் இங்குள்ள துர்க்கைக்கு விசேஷமான முறையில் விளக்கு பூஜை செய்யப்படுகிறது.
🛕 Pilgrimage Guide
🙏 Prayer intention: திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்து பலன் அடைகிறார்கள்.
🕯️ Vow / offering: முருகனுக்கு சண்முக அர்ச்சனை செய்தும், காவடி எடுத்தும், பால் அபிஷேகம் செய்தும், சந்தனத்தால் அலங்காரம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இத்தல முருகனுக்கு சண்முக அர்ச்சனை செய்தால், பிறவிக்கடன் தீரும் என்பது ஐதீகம்.
🎉 Festivals
பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், சித்ரா பவுர்ணமி, தனுர்மாத பூஜை, தைப்பொங்கல்.
Source: Dinamalar Temple Portal.
🕐 Opening Hours
⏰ +91- 4364 -253 202, 94866 31196
Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.
🚗 How to Reach
✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in Thirumarugal or Nagapattinam headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Nagapattinam to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.
Distances and timings vary — please confirm locally before visit.
🏛️ Authority & Grievance
Operatorஉதவி ஆணையர், நாகப்பட்டினம்
Listed contacts are public-office channels only. Grievance policy.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🤝 Improve This Page
📸 Missing a photo? Know updated pooja times? Found an error?
Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.