Arulmigu Kaliamman Thirukoyil

Arulmigu Kaliamman Thirukoyil

அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், ரெட்டைமதக்கடி - 611104
🔱 AyyanarPrivate Temple

ரெட்டைமதக்கடி
Nagapattinam District, Tamil Nadu, India — 611104

📷 Photo Gallery

Arulmigu Kaliamman Thirukoyil photo 1Arulmigu Kaliamman Thirukoyil photo 2Arulmigu Kaliamman Thirukoyil photo 3Arulmigu Kaliamman Thirukoyil photo 4Arulmigu Kaliamman Thirukoyil photo 5Arulmigu Kaliamman Thirukoyil photo 6Arulmigu Kaliamman Thirukoyil photo 7

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

🎉 Festivalஆடி அமாவாசை, ஆடித்திருவிழா, பொங்கல்
🙏 Prayer Intentionதிருமண தோஷங்கள் நீங்க மந்தக்கரை காளியம்மனையும், வியாபாரம், இல்லறம் செழிக்க வடக்கு எல்லை வடகாளியம்மனையும் வழிபடுகின்றனர்.
🕯️ Vow Ritualபிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் வடகாளி அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றியும், குங்குமத்தால் அர்ச்சனை
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: இந்த காளி கிராமத்தில் ஏழு அம்மன்கள் ஒரே ஊரில் அமர்ந்து அருள்பாலிப்பது இத்த

📍 Location

📍 Approximate location — Nagapattinam, Tamil Nadu. Help us add precise coordinates →

ரெட்டைமதக்கடி
Nagapattinam District, Tamil Nadu, India — 611104

📜 About this temple

ஒரு காலத்தில் ஸ்ரீநிவாசபுரம் என அழைக்கப்பட்டது இந்த ஊர். திடீரென ஒரு நாள் ஊர்மக்கள் பலரும் விஷக்காய்ச்சலாலும், வாந்தி-பேதியாலும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வெள்ளம் வந்து வயல்களுக்குள் பாய்ந்து பயிர்களையெல்லாம் அழித்தது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் ஊர் எல்லையில் தஞ்சம் அடைந்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் துயர்களைப் போக்க இங்கு காளி எழுந்தருளினாள். மகிஷாசுரனை வதம் செய்த தேவி எருமையென வந்த அசுரனின் தலை பூமியில் விழக்கூடாது; விழுந்தால் பூமிக்கு ஆபத்து என்று அசுரனின் தலையைக் கொய்ததுடன், பூமியில் விழாமல் கரங்களில் ஏந்தி நின்றாளாம். அப்படி அவன் நின்ற இடம் தான் கிடாத்தலைமேடு என்று திகழ்கிறது. இங்கே காளிதேவி, துர்கையாக எழுந்தருள்கிறாள். மிகுந்த உக்கிரமும், அளவற்ற கருணையும் கொண்ட துர்க்கையாக அனைவரையும் காக்கிறாள். ஊரின் நுழைவுவாயிலில் மந்தகரை காளியம்மனும், இன்னொரு எல்லையில் நத்தம் மாரியம்மனும், வடக்கு எல்லையில் வடகாளியம்மனும் வீற்றிருக்கின்றனர். இந்த வடகாளியம்மனுக்கு வெக்காளியம்மன், பத்ரகாளியம்மன் என பல திருநாமங்கள் உண்டு.

அதிசயத்தின் அடிப்படையில்: இந்த காளி கிராமத்தில் ஏழு அம்மன்கள் ஒரே ஊரில் அமர்ந்து அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பு. இங்குள்ள துர்கா தேவி திருமேனி மூக்கின் நுனியில் மூக்குத்தி போடுவது போன்ற துளையுடன் இருப்பது தனி சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

காளி கிராமத்தின் நடுவே, பிரமாண்டமாக திகழ்கிறது காமேஸ்வரர் கோயில். இங்கேயுள்ள துர்கா தேவி அஷ்டபுஜங்களுடன் காட்சி தருகிறாள். கரங்களில் ஆயுதங்கள் ஏந்தியிருந்தாலும் சாந்தமுகமாக காட்சியளிக்கிறாள். இவளை மகாகாளி எனப் போற்றுகின்றனர். அம்பிகையானவள் ஐந்து இடங்களில் ஐந்து திருவுருவங்களுடன் அருள்பாலிக்கிற அற்புதமான தலம். அதுமட்டுமின்றி காமேஸ்வரர் கோயிலில் பாலசுகாம்பாள், அபிராமியம்பிகை என்று இரண்டு அம்பிகைகள் உள்ளனர். இங்கு கல்யாண வரம் தரும் நித்திய கல்யாணப் பெருமாள் அருள்பாலிக்கிறார். ஏழு தேவியரையும், காமேஸ்வரரையும், நித்திய கல்யாணப் பெருமாளையும் ஒரேநாளில் தரிசித்து, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் எதிரிகள் பயம் நீங்கும். பில்லி-சூனிய பிரச்சனைகள் தீரும்.

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: திருமண தோஷங்கள் நீங்க மந்தக்கரை காளியம்மனையும், வியாபாரம், இல்லறம் செழிக்க வடக்கு எல்லை வடகாளியம்மனையும் வழிபடுகின்றனர். மேலும் மாதவிடாய் பிரச்சனைகள் தீர பாலசுகாம்பாளையும், கல்வி ஞானத்தில் சிறக்க அபிராமியம்பிகையையும் வழிபடுகின்றனர்.
🕯️ Vow / offering: பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் வடகாளி அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றியும், குங்குமத்தால் அர்ச்சனை செய்தும், பாலசுகாம்பாளுக்கு நெய்தீபம் ஏற்றியும், பொங்கல் வைத்தும் மற்றும் அபிராமியம்மைக்கு பச்சைநிற வஸ்திரம் சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

🎉 Festivals

ஆடி அமாவாசை, ஆடித்திருவிழா, பொங்கல்

Source: Dinamalar Temple Portal.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in ரெட்டைமதக்கடி or Nagapattinam headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Nagapattinam to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஉதவி ஆணையர், நாகப்பட்டினம்

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.