📜 About this temple
முன்னொரு காலத்தில் சிவன் பூலோகத்தை தண்ணீர் பிரளயம் மூலம் அழித்து விட்டார். இதையறியாத பிரம்மாவின் மகனாகிய மதங்கர் எனும் முனிவர் தவம் செய்வதற்காக தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்தார். எங்கும் தண்ணீர்க்காடாக இருந்ததால், அவரால் பூமியில் இறங்க முடியவில்லை. அப்போது வான்வெளியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த நாரதரிடம், பூமியில் தவம் செய்ய தண்ணீர் வற்றிய தகுந்த இடத்தை காட்டும்படி ஆலோசனை கேட்டார். அவர் சுவேத வனம் என்ற இடத்தில் தவம் புரியலாம் என ஆலோசனை சொன்னார். அதன்படி அங்கு சென்ற மதங்கமுனிவர் சிவனை வேண்டி தவம் செய்தார். சிவன் அவருக்கு காட்சி தந்தார். சிவனிடம் மதங்கர், ""ஜீவன்களுக்கு தந்தையாக இருக்கும் நீங்கள் எனக்கும் உறவினராக வேண்டும்'' என கேட்டார். சிவன் முனிவரிடம் தகுந்த காலத்தில் அவருக்கு மருமகனாக வருவதாக கூறிவிட்டு மறைந்தார். மதங்கர் மீண்டும் தன் தவத்தை தொடர்ந்தார். ஒரு சித்ராபவுர்ணமி தினத்தன்று அவர் மணிக்கருணை ஆற்றில் நீராடச் சென்றார். அப்போது, நீரில் மிதந்து வந்த தாமரை மலரின் மீது ஒரு அழகிய குழந்தை இருந்ததைக் கண்டார். "மாதங்கி' என பெயர் சூட்டி அவளுக்கு அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுத்து வளர்த்தார். மாதங்கி பருவ வயதை அடைந்த போது, அவளை மணம் முடிக்கும் தகுதி சிவனுக்கு மட்டுமே உண்டு என்று அறிந்திருந்த முனிவர் சிவனை வேண்டினார். சிவன் அங்கு வந்து மாதங்கியை திருமணம் செய்து கொண்டார். பின் அவர்களிருவரும் மதங்கருக்கு சிவ, பார்வதியாக தரிசனம் தந்தனர். அவரது வேண்டுதலுக்காக சிவன், லிங்கமாக எழுந்தருளி "மதங்கீஸ்வரர்' என்ற பெயர் பெற்றார்.
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).