Arulmigu Majhamharesvarar Swamy Thirukoyil

Arulmigu Majhamharesvarar Swamy Thirukoyil

அருள்மிகு எமசம்ஹாரேஸ்வரர் சுவாமி திருக்கோயில், கூரத்தாங்குடி - 610207
🔱 Atkondapillai (Vinayaka)Private Temple🎶 Tevaram Sthalam

கூரத்தாங்குடி
Nagapattinam District, Tamil Nadu, India — 610207

📷 Photo Gallery

Arulmigu Majhamharesvarar Swamy Thirukoyil photo 1Arulmigu Majhamharesvarar Swamy Thirukoyil photo 2Arulmigu Majhamharesvarar Swamy Thirukoyil photo 3Arulmigu Majhamharesvarar Swamy Thirukoyil photo 4Arulmigu Majhamharesvarar Swamy Thirukoyil photo 5Arulmigu Majhamharesvarar Swamy Thirukoyil photo 6Arulmigu Majhamharesvarar Swamy Thirukoyil photo 7Arulmigu Majhamharesvarar Swamy Thirukoyil photo 8

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ OpensThe temple is open from 6.30 a.m. to 12.00 a.m. and from 4.30 p.m. and 7.30 p.m.
📞 Phone+91- 94437 19193.
🎉 Festivalவைகாசி விசாகம். ஆடியில் பட்டினத்தார் விழா.
🙏 Prayer Intentionஅறிவான குழந்தைகள் பிறக்கவும், பொருட்கள் மீதான ஆசை குறையவும் இங்குள்ள பல்லவனநாதரிடம் வேண்டிக்கொள்கின்றனர்.
🕯️ Vow Ritualபிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி, அம்பாள் மற்றும் பட்டினத்தாருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகிறார்கள்
🎵 Praised by Saintsதிருஞானசம்பந்தர் தேவாரப்பதிகம் அங்கமாறும் வேதநான்கும் ஓதும்அயன் நெடுமால் தங்கணாலும் நேடநின்ற சங்கரன்
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

📍 Location

📍 Approximate location — Nagapattinam, Tamil Nadu. Help us add precise coordinates →

கூரத்தாங்குடி
Nagapattinam District, Tamil Nadu, India — 610207

📜 About this temple

முன்னொருகாலத்தில் இப்பகுதியில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவர், கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்தார். 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, திருவெண்காடர் சிவனை வழிபட்டார். இவருக்கு அருள் செய்ய விரும்பிய சிவன், வறுமையில் வாடிய சிவபக்த தம்பதியரான சிவசருமர், சுசீலை என்பவர்களின் மகனாக பிறந்தார். மருதவாணர் என்று அழைக்கப்பட்டார். ஒருசமயம் சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுக்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார். மருதவாணரும் தந்தையின் தொழிலை செய்தார். ஒருசமயம் வாணிபம் செய்து விட்டு திரும்பிய மருதவாணர், தாயாரிடம் ஒரு பெட்டியைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். வீட்டிற்கு வந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். திறந்தவருக்கோ அதிர்ச்சி! அதில் தவிட்டு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எரு மட்டும் இருந்தது. மகனை சம்பாதிக்க அனுப்ப அவன், தவிட்டு எருவைக்கொண்டு வந்ததைக் கண்டவர் கோபத்தில் அதை வீசியெறிந்தார். அதில், ""காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'' என்று எழுதப்பட்டிருந்தது. அதைக்கண்ட திருவெண்காடருக்கு ஒரு உண்மை உரைத்தது. ""மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது,'' என்ற உண்மையை உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்த அவர், இங்கு சிவனை வணங்கி அவரையே குருவாக ஏற்றார். தனது இல்லற வாழ்க்கையை முடித்து, முக்தி கொடுக்கும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் முக்தி கிடைக்கும் என்றார். அதன்பின் பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டு, சென்னை திருவொற்றியூரில் முக்தி பெற்றார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர், "பட்டினத்தார்' என்றழைக்கப்பட்டார். இவருக்கு அருள் செய்த சிவன் இத்தலத்தில் காட்சி தருகிறார்.

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

இக்கோயிலுக்கு எதிரே வங்காளவிரிகுடா கடல் உள்ளது. சுவாமி, கடலை பார்த்தபடி காட்சி தருகிறார். இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும், சுவாமியை நோக்கி, மேற்கு பார்த்தபடி இருப்பது சிறப்பான அமைப்பு. பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் வாகனம் கிடையாது. கோஷ்டத்தில் இரண்டு துர்க்கை இருக்கின்றனர். ஒருவரின் காலுக்கு கீழே மகிஷன் இல்லை. சண்டிகேஸ்வரர் சன்னதியில் இரண்டு பேர் இருக்கின்றனர். இத்தலத்திற்கு அருகில்தான் காவிரி, வங்காள விரிகுடா கடலுடன் சங்கமிக்கிறது. இந்த சங்கமமே இத்தலத்தின் தீர்த்தமாகும். காவிரி, கடலுக்குள் புகும் இடம் என்பதால் "காவிரிபுகும்பட்டினம்' என்றழைக்கப்பட்ட இவ்வூர் தற்போது "பூம்புகார்' என்றழைக்கப்படுகிறது.

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: அறிவான குழந்தைகள் பிறக்கவும், பொருட்கள் மீதான ஆசை குறையவும் இங்குள்ள பல்லவனநாதரிடம் வேண்டிக்கொள்கின்றனர்.
🕯️ Vow / offering: பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி, அம்பாள் மற்றும் பட்டினத்தாருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகிறார்கள்.

🎉 Festivals

வைகாசி விசாகம். ஆடியில் பட்டினத்தார் விழா.

🎵 Hymned by Saints

திருஞானசம்பந்தர் தேவாரப்பதிகம் அங்கமாறும் வேதநான்கும் ஓதும்அயன் நெடுமால் தங்கணாலும் நேடநின்ற சங்கரன் தங்குமிடம் வங்கமாரு முத்தமிப்பி வார்கடலூட லைப்பர் பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே. -திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 10வது தலம்.

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The temple is open from 6.30 a.m. to 12.00 a.m
from 4.30 p.m
7.30 p.m

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in கூரத்தாங்குடி or Nagapattinam headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Nagapattinam to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஉதவி ஆணையர், நாகப்பட்டினம்

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.