📜 About this temple
எந்நாட்டவர்க்கும் இறைவனான சிவனாரின்மீதும், அவர்தம் அடியார்கள் மீதும் அப்படியொரு பக்தி மானக்கஞ்சாறருக்கு! வேளாளரான இவர், படைக்குத் தலைமை வகித்து நடத்தியவர்; எனினும், அன்பிலும் சிவபக்தியிலும் கட்டுண்டு கிடந்தார். தன் மனைவியுடன் சிவனடியார்களுக்குச் சேவை செய்வதில் மகிழ்ந்த மானக்கஞ்சாறருக்கு, ஒரே ஒரு குறை.. தனக்கொரு வாரிசு இல்லையே என்று! நாள்தோறும் தவறாமல் சிவவழிபாடு செய்யும் கல்யாணசுந்தரியும் கஞ்சாறரரும் கண்ணீரும் பக்தியும் பெருக்கெடுக்க, வாரிசு வரம் கேட்டுப் பிரார்த்தித்து வந்தனர். இவர்களது வேண்டுதல் நிறைவேறும் காலமும் வந்தது. கஞ்சாறரின் மனைவி, ஒரு சுபயோக சுபதினத்தில் கருவுற்றாள்; உரிய காலத்தில் அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள். நாங்கள் எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ... எங்களுக்குக் குழந்தைச் செல்வத்தைத் தந்தருளிவிட்டாய் என நெகிழ்ந்தவர்கள், மகளுக்கு புண்ணியவர்த்தினி எனும் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். காலங்கள் ஓடின. புண்ணியவர்த்தினியும் வளர்ந்தாள்; கருகருவென நீண்ட கூந்தலுடன், அழகு ததும்பக் காட்சி அளித்த மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் தருணமும் வந்தது. சிவபக்தியில் திளைத்த கலிக்காமன் என்னும் இளைஞனைத் தன் மகளுக்கு மணம் முடிக்க ஏற்பாடுகள் செய்தார் கஞ்சாறர். இதையறிந்த ஊர்மக்கள், அடடா...! மாமனாரும் சிவபக்தர்; மருமகப் பிள்ளையும் சிவபக்தர் எனக் கொண்டாடினர். வெகு விமரிசையாக திருமண ஏற்பாடுகள் நடக்க... முகூர்த்த நாளும் நெருங்கியது. அடியவர் வீட்டுத் திருமண வைபவத்துக்கு, ஆண்டவன் வராமல் இருப்பானா?! திருமணத்துக்கு முதல் நாள்.. காவி உடையும், கழுத்தில் ருத்திராட்ச மாலைகளும் அணிந்து, மேனி முழுவதும் திருநீறு தரித்தபடி சிவனடியார் ஒருவர் வந்தார். அவர்... மாவிரதியர். அதாவது சிரசின் முடியை ஐந்து பிரிவுகளாக்கி பூணூலாக அணிந்துகொள்ளும் வழக்கம் உள்ளவர். வடக்கில் உள்ள சிவனடியார்கள் சிலர் இப்படித்தான் பூணூல் தரிப்பர் என்பதை அறிந்தார் கஞ்சாறர்; தொலைவிலிருந்து வந்த சிவனடியாரை அன்புடன் வரவேற்றார். மனைவி, மகள் சகிதம் விழுந்து வணங்கினார். அப்போது, அந்த மணமகளின் நெடுங்கூந்தலைக் கண்ட சிவனடியார், இவளின் முடி, நமக்குப் பஞ்சவடி (பூணூல்) என்று சொல்லிப் புன்னகைத்தார். உடனே கஞ்சாறர், என் பாக்கியம், என் பாக்கியம்...! என் மகளின் தலைமுடி, தங்களுக்குப் பூணூலாகப் பயன்படப் போகிறதே! எனச் சொல்லிச் சிலிர்த்தவ
இத்தலத்தில், ஜடாநாதர் எனும் திருநாமத்துடன், அரிந்தெடுத்த கூந்தலை இடதுகையில் பிடித்தபடி காட்சி தரும் சிவனாரை காண்பது கோயிலின் தனி சிறப்பு. சப்தகன்னியரில் கவுமாரி வழிபட்ட தலம் இது.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).