🛕 Arulmigu Boominatheswarar Temple

அருள்மிகு பூமிநாதேஸ்வரர் திருக்கோயில், ராங்கியம், திருமயம் வட்டம் - 622409
🔱 Boominatheswarar

📜 About this temple

இந்த உலகம் நான்கு யுகங்களைச் சந்தித்திருக்கிறது. இதில் முதல் யுகமான கிருதயுகத்தில், பூமாதேவி கடும் தவமிருந்தாள். எதிர்வரும் யுகங்களில் பூமிபாரத்தை தாங்கும் சக்தியை அதிகரித்து தர வேண்டும் என்பது அவளது வேண்டுகோள். அவள் முன் தோன்றிய சிவபெருமான், தாயே! இந்த திரேதாயுகம், துவாபரயுகத்தில் இப்பூமியைத் தாங்குவதற்குரிய சக்தியைத் தருகிறேன். ஆனால், கலியுகத்தில் இப்பூமியைத் தாங்கும் சக்தியைப் பெற இந்த தவம் போதாது. உனது பக்தர்கள் உன்னை பூஜிப்பதன் மூலமே இந்த வலிமை உனக்கு கிட்டும். இதற்கு நாராயணனின் கிருபையும் தேவை என சொல்லி மறைந்தார். இவ்வுலகில் நல்ல பக்தர்கள் யார் இருக்கிறார்கள் என தேடியலைந்த பூமாதேவி, அவள் பல தலங்களுக்கும் சென்றாள். சென்ற இடமெல்லாம் ஆங்காங்கு இருந்த சுயம்பு மூர்த்திகளை பிரார்த்தித்தாள். அவள் பிரார்த்தித்த மூர்த்திகளுக்கு பூமிநாதர், பூலோகநாதர் என்ற பெயர்கள் ஏற்பட்டது. அதில் ஒன்றே செவலூர் பூமிநாதர் கோயிலாகும்.

செவலூர் அருகிலுள்ள பிருத்வி தீர்த்தம் இன்று சாதாரண குளமாகத் தோற்றமளிக்கிறது. இதன் மகிமை அளவிட முடியாதது. பித்ரு தர்ப்பணத்துக்கு ஏற்ற தீர்த்தம் இது. இத்தலத்து லிங்கம் பல பட்டைகளைக் கொண்டது. பூமாதேவி இந்த லிங்கத்தை பூஜித்த போது, ஒவ்வொரு யுகத்திலும் மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, கஸ்தூரி காப்பு, வெண்ணெய் காப்பு, மூலிகை காப்பு என பலவித காப்புகளை சார்த்தி பூஜித்ததால், இந்த பட்டைகள் உருவானதாக கூறப்படுகிறது. மகா விஷ்ணுவால் எழுப்பப்பட்ட புண்ணியத் தலம், மூலவர் லட்சுமி நரசிம்மர் மீது வருடத்தின் எல்லா நாட்களும் சூரியஒளி படுவது போல் கருவறை அமைந்திருப்பது வியப்பான ஒன்றாகும்!

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).