📜 About this temple
இத்தலம் ஒரு காலத்தில் ராஜராஜ வளநாடு என அழைக்கப்பட்டது. இங்கு வசித்த வணிகர் ஒருவருக்கு அழகான மகள் இருந்தாள். இவளை மதுரையில் வசித்த தன் தங்கை மகனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தார் வணிகர். ஆனால், அவன் இன்னொரு பெண்ணை காதலித்து திருமணமும் முடித்து விட்டான். இவ்விஷயம் தெரிந்தும், தங்கை மகனுக்கே மகளைக் கொடுப்பதென்ற முடிவில் இருந்தார் வணிகர். பெற்றவர் பேச்சை மீறாத அந்த பெண்ணும், கடவுள் சித்தப்படி நடக்கட்டும் என விட்டு விட்டாள். தினமும் தங்கள் ஊரிலுள்ள சுகந்த பரிமளேஸ்வரர் கோயிலுக்கு சென்று, சுவாமியையும், பெரியநாயகி அம்பாளையும் வணங்கி வந்தாள். இதனிடையே அப்பெண்ணின் பெற்றோர் இறந்து விட்டனர். அனாதையான அவள் பரிமேளஸ்வரர் சன்னதிக்கு சென்று அழுதாள். இறைவன் அவளுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து உதவ முடிவெடுத்தார். அவர் முதியவர் வடிவில் அங்கு வந்து, அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூற வந்த அவளது முறைப்பையனிடம் , ""அவள் உனக்காகவே பிறந்தவள். நீ இன்னொரு திருமணம் செய்திருந்தாலும் கூட, ஆதரவற்றவளாய் நிற்கிறாள். எனவே, நீயே அவளைத் திருமணம் செய்து கொள்,'' என்றார். அவன் அவளுக்கு அவ்விடத்திலேயே மாலை சூடினான். அப்பெண் அந்த முதியவரிடம், ""பெரியவரே! நான் அவரது மனைவியாகி விட்டேன். இங்கு உங்களைத் தவிர வேறு சாட்சி இல்லை. மதுரையில் உள்ளவர்கள் எங்களுக்கு திருமணம் நடந்ததற்கு சாட்சி கேட்டால் என்ன செய்வேன்?'' என்றாள். அதற்கு பெரியவர், ""இத்தல விருட்சமான வன்னிமரமும், இக்கோயில் கிணறும்தான் இத்திருமணத்தைப் பார்த்தன. உனக்கு பிரச்னை ஏற்படுமானால், இவை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து சாட்சி சொல்லும்,'' என்றார். பின்னர் மறைந்து விட்டார். இறைவனே தங்கள் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார் என்பதை உணர்ந்த அத்தம்பதியர் மகிழ்வுடன் மதுரை வந்தனர். இதை மூத்தவளும், அவளது உறவினர்களும் ஏற்கவில்லை. இறைவன் திருமணம் முடித்து வைத்தார் என்பதற்கு என்ன சாட்சி என கேட்டனர். அவர்கள் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் சென்றால், வன்னிமரமும், கிணறும் தோன்றி சாட்சியளிக்கும் என்றனர். எல்லாரும் கோயிலுக்குச் சென்றனர். கோயிலின் வடக்கு பிரகாரத்தில் வன்னிமரமும், கிணறும் தோன்றின. (இக்கிணறு இன்றும் உள்ளது. வன்னிமரம் ஆடிவீதியில் இருக்கிறது) அனைவரும் இறைவனின் லீலையே இது என்பதை உணர்ந்தனர். பின்னர் இருவரும் அவனுடன் இன்புற்று வாழ்ந்தனர்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் கோயிலுக்குள் கொடி மரத்தின் அருகில்தான் இருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் ராஜகோபுரத்துக்கு முன்னால் நந்தி தேவர் உள்ளார். இவர் சுயம்புவாக எழுந்தருளியவர் (தானாக தோன்றியவர், சிற்பி செதுக்காத சிலை) என்பதால் சக்தி அதிகம். இதுதல விருட்சம் இல்லாத சிவாலயம் என்ற சிறப்பை பெறுகிறது. இக்கோயிலைச் சுற்றி, கோயிலின் சங்கு ஒலி கேட்கும் தூரத்துக்குள் கிணறு வெட்ட முயற்சித்தால், வேலையில் தடங்கல் ஏற்பட்டு நின்று விடுகிறது.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).