🛕 Arulmigu Kamanatheeswarar Temple

அருள்மிகு காமநாதீஸ்வரர் மற்றும் கரிவரதராஜபெருமாள் திருக்கோயில், ஆத்தூர் தலைவாசல் ரோடு, அறகழூர் - 636101
🔱 Kamanatheeswarar

📜 About this temple

சிவனுக்கு அழைப்பு விடுக்காமல், தட்சன் தன்னலம் கருதி ஒரு யாகம் நடத்தினான். யாகத்திற்கு செல்ல வேண்டாம் என அம்பாளிடம், சிவன் சொல்லியிருந்தும் அவர் மனம் பொறுக்காமல் சென்றுவிட்டார். இதனால், சிவன் கோபம் கொண்டார். தனித்திருந்த அவர், மனஅமைதி வேண்டி இத்தலத்தில் தங்கினார். அம்பாள், சிவனின் கோபம் தணிக்க வேண்டி தனது அண்ணன் மகாவிஷ்ணுவுடன் வந்து சுவாமியை வணங்கி தவமிருந்தார். இங்குள்ள வில்வ மரத்தின் அடியில் சிவன் காட்சிதந்து அம்பாளை மன்னித்தார். இவ்விடத்தில், சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். பிரகாரத்தில் இம்மரம் உள்ளது. பிரிந்துள்ள தம்பதியர்கள் இம்மரத்தை சுற்றி வந்து சுவாமியை வணங்கினால் ஒற்றுமையாக வாழ்வர் என்பது நம்பிக்கை.

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மாசி மாத முதல்வாரத்தில் லிங்கத்தின் மீது சூரியன் நேரே தனது ஒளியைப்பரப்பி பூஜை செய்கிறார்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).