🛕 Arulmigu Aathikorakkanatha Swamy Temple

அருள்மிகு ஆதிகோரக்கநாதசுவாமி திருக்கோயில், Thirupuvanam - 630611
🔱 Aathikorakkanatha Swamy

📜 About this temple

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் குழந்தை வரம் தரும் சித்தர் கோயில் உள்ளது. மச்சேந்திர நாதர் இந்த மஹாத்மா தீர்த்தயாத்திரை செய்து கொண்டு அனேக புண்ய தீர்த்தங்களில் மூழ்கி திவ்ய திருப்பதிகளில் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய பகவத்ரூபங்களை தரிசித்து பிச்சை எடுத்து பிழைத்து ஓரிடத்திற் பொருந்திராமல் நாட்களைக் கழிப்பாராயினார். ஒருநாள் இவர் கோரக்பூரில் ஒரு வர்த்தகன் வீட்டுக்கு போய் இச்சையற்றவனுக்குப் பிச்சை போடு என்றார். அவ்வர்த்தகன் மனைவி அன்னங்கொண்டு வந்து அவர்க்குக் கொடுத்து காஷாய், தாராய் நீறுபூசின மேனிப்பொலிவுடன் விளங்கிய அவரைக் கண்டு இவர் யாரோ மஹாத்மாவாக இருக்க வேண்டும் என்றெண்ணி, ஓ ஸாது சிகாமணி தேவரீர், எங்கிருந்து எங்குச் செல்கின்றீர் யான் செய்த புண்ணிய விசேடத்தால், தேவரீர், இங்கெழுந்தருளினீர் என இனியமொழி கூறி வணங்கி நின்றாள். அவளைக் கண்ட மச்சேந்திரர் அம்மணி நான் பரதேசி எனக்கென்று ஓரிடம் இல்லை. தீர்த்த யாத்திரை செய்கின்றேன். ஆசை இல்லேன் என்று கூறக்கேட்ட அவ்வர்த்தகன் மனைவி ஓ மகாத்மா எங்களுக்கு ஏராளமான திரவியம் இருந்தும் புத்ர பாக்கியம் இல்லாதபடியால் எங்கள் வீடு, சந்திரன் இல்லாவானம் போல் பொலிவற்றிருக்கின்றது. ஆகையால் எனக்கு ஸந்தானம் உண்டாகும்படி அனுக்கிரகம் செய்ய வேண்டும் என வேண்டினாள். அவர் அவள் மேற்கிருபை கூர்ந்து ஒரு சிட்டிகை விபூதியை அவள் கரத்தில் இட்டு இதனை வாயில் போட்டுக்கொள். உனக்கு விஷ்ணுவைப் போல் ஒருபுத்திரன் பிறப்பான் எனக் கூறி தம் வழியே சென்றார். அவ்வர்த்தகன் மனைவி மச்சேந்திரநாதர் அனுக்கிரகித்துக் கொடுத்த விபூதியை உடனே வாயில் போட்டுக் கொள்ளாமல் தனக்கு நேசமான பெண்களுடன் அவ்விபூதி கிடைத்த விபரத்தை கூறினாள். அவர்கள் பெண்களாகையால் பெருமிதமான குணத்தை விட்டு பேதமை குணத்தால் சன்னியாசிகளை நம்பக்கூடாது. சொக்குப்பொடி போட்டு மனிதரை மயக்கி வசப்படுத்துபவர் என்று சொல்ல அவ்வார்த்தைகளை உண்மையென நம்பி அவள் அந்த விபூதியை அடுப்பில் போட்டாள். பனிரெண்டு வருடங்களுக்கு பிறகு மச்சேந்திரர் கோரக்பூர் வந்து வர்த்தகன் வீட்டுக்குப் போய் இச்சையற்றவனக்குப் பிச்சையிடுங்கள். என்று கேட்க, வர்த்தகன் மனைவி அன்னங்கொண்டு வந்து கொடுத்தாள். அப்போது இந்தப்புண்ய புருஷர் அந்த மாதை நோக்கி நான் தந்த விபூதியால் உண்டான புத்திரனைக்கான விரும்புகின்றேன் என்றார். அப்பெண்மணி அத்திருநீர் பற்றி பேசினால் இவர் சப

இந்து குடும்பங்களில் முஸ்லிம் பெயர் சூட்டுவது இந்த கோயிலில் மட்டும்தான் என்பது சிறப்புமிக்கதாகும்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).