🛕 Arulmigu Adkondanatha Swamy Temple

அருள்மிகு ஆட்கொண்டநாதசுவாமி திருக்கோயில், Iraniyur - 630212
🔱 Adkondanatha Swamy

📜 About this temple

திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அசுரனான இரண்யனை சம்ஹாரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்க சிவனை வழிபட்டார். சிவன், அவருக்கு காட்சி தந்து தோஷம் நீக்கினார். திருமாலின் வேண்டுதலுக்காக சிவன், இத்தலத்தில் "ஆட்கொண்டநாதர்' என்ற பெயரில் எழுந்தருளினார். நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால் இவருக்கு, "நரசிம்மேஸ்வரர்' என்றும் பெயருண்டு.

ஆட்கொண்டநாதர், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். பிரகாரத்தில் முருகன் மயிலில் அமர்ந்துள்ளார். அருகில் இருக்கும் வள்ளி, தெய்வானையும் மயில் வாகனங்களில் அமர்ந்திருப்பது காணக்கிடைக்காத காட்சி. நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).