📜 About this temple
திருப்புத்தூர் ஆன்மிகச் சிறப்பு மிக்க பழமையான நகரம். புராணம், இலக்கியம், கல்வெட்டு ஆகிய வற்றின் அடிப்படையில் இந்நகருக்குப் பல சிறப்பு பெயர்கள் உண்டு. நூதன கிராமம், நவபுரம் வரகுணப்பாண்டியன் காலத்தில் இந்நகர் புதிதாக உருவாக்கப்பட்டாதால் நூதன கிராமம், நவபுரம் என அழைக்கப்பட்டது. நூதனம் என்றால் புதுமை என்றும், நவபுரம் என்றால் புதிய நகரம் என்றும் பொருள். கொன்றை வனம் புராண காலத்தில் கொன்ற மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் கொன்றை வனம் என பெயர் உண்டானது. தமிழ் இலக்கியங்களில் இப்பெயர் இடம் பெற்றுள்ளது. ராமாயண காவியத்துடன் இத்தலம் தொடர்புடையது. வால்மீகி இவ்வனத்தில் தவம் இருந்ததால் இத்தலத்திற்கு வால்மீகிபுரம் என்று பெயருண்டு. வால்மீகம்’ என்றால் புற்று’ இங்கு கரையான் புற்றுக்கள் அதிகமாக இருந்ததால் வால்மீகிபுரம் என அழைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்வர். திருப்புத்தூர் பகுதியில் அதிகமான புற்றுகள் இருந்ததால் புற்றூர் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. செல்வம் மிகுந்த நகராக மாறியதால் திரு அடைமொழிச் சேர்க்கப்பட்டு திருப்புற்றூர்’ எனப்பட்டது. அது நாளடைவில் திருப்புத்தூர் என்று மருவியதாகச் சொல்வர். திருப்புத்தூரிலிருந்து சிங்கம்புணரி சாலையிலுள்ள பெரியகண்மாய் கரைச் சரிவில் குளங்கரை கூத்த அய்யனார் கோவில் உள்ளது. இங்கு மூலவர் கர்ப்பகக் கிரகத்தனுள் செப்பு வண்ணத்திலான பித்தளை திருவாச்சியுடன் மூலவர் குளம்கரை கூத்த ஐயனார் உடனாய பூரண புஷ்கலை தேவியர் ஒன்றரை அடி கற்பீடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயிலில் அனைத்து தெய்வங்களின் விக்ரகங்களும் இருப்பது சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).