🛕 Arulmigu Sowmyanarayana Perumal Temple

அருள்மிகு சௌம்யநாராயணப்பெருமாள் திருக்கோயில், Thirukosthiyur - 630201
🔱 Sowmyanarayana Perumal

📜 About this temple

பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் பயந்த முனிவர்கள் இரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். சுவாமியும் அவர்களது கோரிக்கையை ஏற்றார். இதனிடையே இத்தலத்தில் கதம்ப மகரிஷி, விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அவர் தான் தவமிருக்குமிடத்தில், எவ்வித தொந்தரவும் இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்தார் மகாவிஷ்ணு. அப்போது நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிக்கப்போவதாக கூறினார் மகாவிஷ்ணு. மகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை தங்களுக்கு காட்டும்படி வேண்டினர், எனவே, அவதாரம் எடுப்பதற்கு முன்பே இங்கு நரசிம்ம கோலம் காட்டியருளினார். இதனால் மகிழ்ந்த கதம்ப மகரிஷியும், தேவர்களும் அவரது பிற கோலங்களையும் காட்டும்படி வேண்டினர். சுவாமியும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு, இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் "திருக்கோட்டியூர்' என்றும் பெயர் பெற்றது. இந்த முறை அடியேன் ராமானுஜன், தங்கள் தாசன். என்னை ஆசிர்வதித்து மந்திரோபதேசம் அருள வேண்டும் என்று நம்பியிடம் வேண்டினார் ராமானுஜர். ராமானுஜரின் பணிவு நம்பியைக் கவர்ந்தது. அவரை தனியாக அழைத்துச்சென்ற நம்பி, இந்த எட்டெழுத்து மந்திரத்தை நீ உபதேசம் பெற்றபின் யாருக்கும் அறிவிக்கவோ, உபதேசம் செய்யவோ கூடாது. என் கட்டளையை மீறினால், நீ நரகம், செல்வாய் என்ற கண்டிப்புடன் உறுதிமொழி பெற்றபின், ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜரின் காதில் உபதேசித்தார். ராமானுஜரை ஆசிர்வதித்த நம்பி, என் கட்டளையை மீறாதே -இது வைகுண்டம் செல்ல வழிவகுக்கும் மந்திரம். மிக ரகசியமானது என்று அறிவுரை கூறி விடையளித்தார். நம்பியிடம் மந்திரோபதேசம் பெற்றதும், ராமானுஜர் உடலில் புதிய ஒளி தென்பட்டது. அந்த மந்திரத்தை மனதிற்குள் ஜெபித்துக்கொண்டே வந்தவர் தன்னுடன் வந்த இரு சீடர்களைப் பார்த்து புன்னகைத்தார். எதிரே சவுமியநாராயணன் கோயில் தெரிந்தது. அங்கு சென்று கோயிலிருக்கும் அனைத்து தெய்வங்களையும் வழிபட்டவர், அருகே

மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு கோயில்களில் தான் இந்த அஷ்டாங்க விமானம் உள்ளது. ராமானுஜர் உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்த தலம்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 95 வது திவ்ய தேசம்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).