📜 About this temple
இடங்கொண்டீஸ்வரர் முன்னொரு காலத்தில் இடை மருதூரில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அக்காலத்தில் மத்யார்ஜுனமாகிய மகாலிங்க பரமேஸ்வரன், தனது மூத்தவரான ஆதி மத்யார்ஜுனத்திடம் அண்ணா! எனக்கு இடம் கொடுங்கள் என்று கேட்டவுடன், இடத்தை மத்யார்ஜுனனுக்குக் கொடுத்துவிட்டார். அன்று முதல் அவர் இடம் கொடுத்த ஈஸ்வரன் என்று பெயர் பெற்றார். அப்பர் பெருமானும், இடம் கொடுத்த அம்மானே எனப் பாடியுள்ளார். இத்தலம் வைப்புத்தலமாகவும் விளங்குகிறது! திருக்கல்யாணபுரத்தில் காவிரி நதியின் வடபுரத்தில் தவசீலர்களில் ஒருவரான கச்சப முனிவர் கடும் தவம் புரிந்தார். தவத்தை அறிந்த பரமேஸ்வரன், அசரீரி வாக்காக முனிவரே! தாங்கள் எதற்காக, தவம் புரிகிறீர்கள்? எனக் கேட்டபோது எனக்கு இந்த காவிரி நதி தீரத்தில் ரிஷப வாகனத்தில் பார்வதி-பரமேஸ்வரன் தம்பதி சமேதராக காட்சியளிக்க வேண்டும்.. எனக் கேட்டார். அசரீரி வாக்கும் அப்படியே காட்சி அளிக்கின்றோம் எனக் கூற கச்சப முனிவரே எந்தக் காலகட்டத்தில் எனக்குக் காட்சி கிட்டும்? எனக் கேட்டார் அப்போது அசரீரி; நான் காட்சி கொடுக்கும் தருணத்தில் முன்னதாக காவிரி நதிக்கரையோரம் லிங்கங்கள் முளைக்கும் அதை வைத்து நான் வருவதாக உணர்ந்து கொள்ளவும்.......எனக்கூற அதற்காக முனிவரும் காத்திருந்தார். தை மாதம் பவுர்ணமி தினத்தன்று லிங்கங்கள் முளைக்க ஆரம்பித்தன. அப்போது ஆதிமத்யார்ஜுனமும், மத்யார்ஜுனமாகிய மகாலிங்கப் பெருமானும் தம்பதி சமேதராக ரிஷபவாகனத்தில் முனிவருக்குக் காட்சியளித்தனர். அந்தக் காட்சியை முனிவரும் கண்டு களித்தார். அதன் பின்னர் கச்சப முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க ஈசன் பிரஹத்சுந்தர குஜாம்பிகை அம்பாளோடு திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி தந்து அருளியதால் இவ்வூர் திருக்கல்யாணபுரம் எனப் பெயர் பெற்றது.
தேவார வைப்புத்தலங்களில் இடங்கொண்டீஸ்வரர் மிகவும் முக்கியத்தலமாக கருதப்படுகிறது.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).