🛕 Arulmigu Kailasanathar Swami Temple

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், Mushri - 614901

📜 About this temple

மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ததால், அன்னை துர்க்கைக்கு தோஷம் ஏற்பட்டது. இதனைப் போக்க, அவள் சிவனை எண்ணி தவமிருந்தாள். பூலோகத்திலுள்ள தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, விநாயகர் மற்றும் சிவலிங்கம் ஸ்தாபித்து தியானம் செய்தாள். 12 ஆண்டுகள் தவம் தொடர்ந்தது. தவத்தினால் மகிழ்ச்சியடைந்த சிவன் அம்பாள் முன்தோன்றி, உன்தோஷம் நீங்கி விட்டது. இத்தலத்திலேயே தங்கி, உன்னை தரிசிப்பவர்களின் சகல தோஷங்களையும் நீக்கி, அவர்கள் வேண்டும் செயல்களுக்கு வெற்றியை அருள்வாயாக, என்று வரமளித்தார். தேவி தவம் செய்த இடம் தேவி தபோவனம் எனப்பட்டது. இங்குள்ள தீர்த்தம் அம்மனின் பாவத்தைப் போக்கியதால் பாவ விமோசன தீர்த்தம் எனப் பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், அம்மன் குடியிருக்க தேர்ந்தெடுத்த இடம் என்ற பொருளில் அம்மன்குடி என்றாகி, பேச்சு வழக்கில் அம்மங்குடி ஆகி விட்டது. முதலாம் ராஜராஜசோழ மன்னனின் படைத்தலைவர் கிருஷ்ணன் ராமன் பிரம்மராயன் இவ்வூரில் பிறந்தவர். இவரே தங்கள் ஊரில் தங்கிய அம்பாளுக்கு கோயில் கட்டினார். ராஜராஜேஸ்வரியான துர்கா தேவி தங்கியதால் இவ்வூருக்கு, ராஜராஜேஸ்வரம் என்று பெயர் வைத்தார். மன்னர் ராஜராஜ சோழனின் மீது அன்பு கொண்டவர் என்பதால், அவரது பெயரை வைத்ததாகவும் கூறுவர். அம்பாளுக்கு துர்கா பரமேஸ்வரி என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்பாள் பூஜித்த லிங்கமும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு கைலாசநாதர் என்று திருநாமம் சூட்டப்பட்டது.

இத்தலத்தில் உள்ள விநாயகரின் சிற்பம் சாளக்கிரமத்தால் ஆனது. காலையில் பச்சை, மதியம் நீல நிறம், மீண்டும் மாலையில் பச்சை நிறமாக மாறிவிடும் தன்மை கொண்டது. சிவனை தன்னுள் அடக்கிய துர்க்கை ஸ்தலம். ஒரு சிவன் கோயிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இதன் தனி சிறப்பாகும்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).